மேஷம்
மேஷ ராசி நண்பர்களே,பொருளாதார உயர்வு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும்.யாரையும் அதிகம் நம்பி ஏமாற வேண்டாம். கடன் நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, பழைய நல்ல சம்பவங்கள் ஞாபகத்திற்கு வரும். பால்ய நண்பர்களின் சந்திப்பு நிகழும்.உறவினர்கள் உதவிக் கேட்டு தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவர். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். உத்யோக மாற்றம் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் வந்து போகும். மனதில் ஒரு வித படபடப்பு ஏற்படும். முக்கிய வேலைகளை முடிக்க வேண்டிவரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.தொழில் வியாபாரங்கள் சிறப்படையும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே,காரிய தடைகள் விலகும். முன்னேற்றத்திற்கான நல் வழி கிடைக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும்.யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். பிரபலங்களின் தொடர்பு உற்சாகம் தரும். வாகன யோகம் உண்டு. தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் விருத்தினர்கள் வருகை இருக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனப்போர் நீங்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்துடன் பயணிக்க விருப்பம் ஏற்படும். மனதில் புது உற்சாகம் பிறக்கும். நீண்ட நாள் பிரச்னைக்கு முடிவு வரும். உத்யோகத்தில் உயர் பதவிகள் தேடி வரும்.தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப நிதி நிலைமை சீரடையும். பிரியமானவர்கள் வழியில் நல்லது நடக்கும். காரிய தடை விலகும். பொருளாதார உயர்வு உண்டு.தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, பிரியமானவர்களின் அன்பை பெற முடியும். கணவன் மனைவிக்கு உறவு பலப்படும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.மாலை 06:55 வரை சந்திராஷ்டமம் நீடிக்கிறது.
மகரம்
மகர ராசி நண்பர்களே, புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.வார்த்தைகளை அளந்து பேசவும் யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம் . புது நண்பர்கள் அறிமுகமாவர். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.மாலை 06:55 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனம் தேவை.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்ப பெரியோர்கள் ஆதரவாக இருப்பர்.பூர்வீக சொத்து பிரச்சனைகள் தீரும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். தேவையான பொருட்களை வாங்க முடியும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, எந்த ஒரு எதிர்ப்புகளையும் சமாளிக்க முடியும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். பெற்றோருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும்.சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும்.தொழில், வியாபாரத்தில் செழிப்படையும்.