மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, குலதெய்வ வழிபாடு நன்மை தரும். பழைய இனிமையான சம்பவங்கள் நினைவுக்கு வரும். அனாவசிய செலவுகளை குறைக்க பார்க்கவும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும்.தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும் உழைப்பிற்கேற்ப ஊதியம் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். பண தேவைகள் அதிகரிக்கும். கடனகள் சிறுக சிறுக அடைபடும்.உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரம் சிறப்படையும்
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, மனதில் தெம்பும், தைரியமும் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தாருடன் நல்லுறவு ஏற்படும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். எதிர்பார்த்த காரியம் சிறப்பாக முடியும்.பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவார்கள். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். பிரியமானவர்கள் வழியில் சில மனவருத்தம் வரும். அன்னிய மொழிக்காரர்களிடம் எச்சரிக்கையாக பழகவும். பண வரவில் இருந்த தடை நீங்கும். தொழில், வியாபாரங்கள் சிறப்பாக அமையும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும்.திடீர் பண வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். மனதில் தோன்றுவதை தைரியமாக செயல்படுத்துங்கள். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, உறவினர்கள் உதவி கேட்டு தொந்தரவு செய்வர். மனதிற்கு இதமான செய்தி ஒன்று வரும்.காதல் கைகூடும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும்.உறவினர்களிடம் கவனமாக பழகவும். பயணங்கள் சாதமாக அமையும். காரியம் அனுகூலம் உண்டாகும்.அலைச்சல் அதிகமாக காணப்பட்டாலும் லாபம் உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள் அண்டை, அயலாருடன் நட்புறவு ஏற்படும். பழைய சிக்கல் ஒன்று பேச்சு வார்த்தை மூலமாக இன்று தீரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தில் குதூகலம் பூத்துக் குலுங்கும். சாதூர்யமாக பேசி காரியம் சாதிக்க முடியும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.வருங்கால சேமிப்புகளுக்கான முயற்ச்சிகள் தொடங்குவீர்கள்.வாகன யோகம் உண்டு. தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும்.வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில் போட்டிகள் குறையும்.தொழில், வியாபாரம் செழிப்படையும்.சந்திராஷ்டமம் நீடிக்கிறது கவனம் தேவை.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். யாரையும் திருப்திப்படுத்த நினைக்காதீர்கள்.மன பாரம் கூடும். பெற்றோர்கள் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.தொழில் போட்டிகள் இருக்கும்.
மீனம்
மீன ராசி நண்ர்களே,மனதில் ஒருவித பயம் தோன்றும். அடுத்தவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். சொந்த தொழில், விருத்தி பெறும்.வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.