மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, விலகிச் சென்ற நபர்கள் வலிய வந்துப் பேசுவர். வெளிநாட்டு யோகம் உண்டு. விருந்தினர் வருகை மகிழ்ச்சியை தரும்,.அலைச்சல் அதிகமாக கணப்படும் வரவுக்கேற்ப சிலவுகளும் உண்டாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வர்.அன்னிய மொழிக்காரர்களின் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் கூடும். கோயில் தலங்களுக்கு சென்று வருவீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்ப விஷயங்களை யாரிடத்திலும் விவாதிக்க வேண்டாம். உஷ்ணம் தொடர்பான தொந்தரவு இருக்கும். பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும்.
வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, மனதிற்கு இதமான செய்தி ஒன்று வரும். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பழகுவர். வம்பு, வழக்குகளில் ஈடுபட வேண்டாம். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்ப நபர்களின் அன்பும், ஆதரவும் கிட்டும். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டுப் பேச வேண்டாம்.முன் கோபத்தை தவிற்க்கவும். பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும்.கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோக மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, உற்றார், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு பலப்படும். பெற்றோர்களின் ஆதரவு வழக்கம் போல் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, புது நண்பர்களின் சேர்க்கை நம்பிக்கை தரும். பண உதவிகள் கிடைக்கும்.தேவையான பொருட்களை வாங்க முடியும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.தொழில் வியாபாரம் சிறப்படையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, மற்றவர்களுக்கு வேண்டிய உதவியை செய்து தர முடியும். உடல் சோர்வு, அசதி நீங்கும். பயணங்களால் அலைச்சல், செலவுகள் அதிகரிக்கும். ஆடம்பர சிலவுகள் குறைக்கவும்.தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
புதிய முதலீடுகளால் இரட்டிப்பு லாபம் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். விலகி நின்றவர்கள் மீண்டும் வந்து இணைவர். திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். கணவன் மனைக்குள் புரிதல் இருக்கும்.தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.
மகரம்
மகர ராசி நண்பபர்களே, வெளியுலக தொடர்புகள் அதிகரிக்கும். முக்கியஸ்தர்களின் சந்திப்பு நிகழும்.எதிர்கால திட்டங்கள் ஒவ்வொன்றாக கைகூடிவரும். உடல் உபாதைகள் நீங்கும்.மருத்துவ சிலவுகள் குறையும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்ப விருப்பங்களை பூர்த்தி செய்ய முடியும். முக்கிய நபர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை நிகழும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும்.உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
தொழில் வியாபாரம் மிதமாக இருக்கும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, பிடிவாத போக்கை கொஞ்சம் தளர்த்திக்கொள்ளவும்.யாரிடமும் கோபத்தை காட்டாதீ்கள். பிரியமானவர்கள் பக்கபலமாக இருப்பர். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.