மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, குடும்பத்தில் மன நிம்மதி உண்டு. அடுத்தவரிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். கடனாக கொடுத்த பணம் கைக்கு திரும்ப வரும். தொழில், வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, சொந்த காரியங்களில் அதிக அலைச்சல் இருக்கும். உறவினர்கள் நேசம் கரம் நீட்டுவர். செலவுகளை குறைக்க பார்க்கவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
ராசிககுள் சந்திரன் இருப்பதால் யாருக்கும் வாக்கறுதிகளை வழங்க வேண்டாம்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, புது நண்பர்களால் செலவுகள் வரக்கூடும். பழைய சொந்தங்களின் வருகை இருக்கும். பிரபலங்கள் அறிமுகமாவர். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்ப விருப்பங்களை நிறைவேற்ற முடியும். தேவையற்ற பேச்சை தவிர்ப்பது நல்லது. தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உற்றார், உறவினர்களால் ஆதாயம் உண்டு. முக்கிய முடிவுகள் எடுக்கும் போது சிறிய தடுமாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் நன்மை பயக்கும் விஷயங்கள் நடக்கும். உணவு கட்டுப்பாடு அவசியம். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும்.தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, வாக்கு சாதுரியம் ஏற்படும். மற்றவர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம்.கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, நினைத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும். மனப்போராட்டங்கள் குறையும். உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்ப அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியும். பிரபலங்கள் அறிமுகமாவர். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் புது விஷயங்கள் நடக்கும். நண்பர்களிடம் சின்ன மனஸ்தாபம் வரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில்.
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பண வரவு நன்றாக இருக்கும்.பராமரிப்பு செலவுகள் கூடும். அடுத்தவர்களை குறை கூறுவதை தவிர்க்கவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, உங்கள் செயலில் வேகமும், விவேகமும் இருக்கும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்