Breaking News :

Wednesday, October 16
.

இன்றைய ராசி பலன்கள் - 01-10-2024 செவ்வாய்க் கிழமை


மேஷம்
மேஷ ராசி நண்பர்களே,ஆடம்பர சிலவுகளை குறைக்கவும். உறவினர்கள் உறுதுணையாக இருப்பர். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். தொழில், வியாபாரம் புதிய பாதையில் செல்லும்.

ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, எதிர்பார்த்த காரியங்கள் தாமதாக நடக்கும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.கணவன் மனைவிக்குள் தேவையற்ற சண்டைகள் தவிற்க்கவும் உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசி நண்பபர்களே,மனம் அமைதி பெறும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். நட்பால் நன்மை வந்து சேரும்.பண சேமிப்பில் ஆர்வம் பிறக்கும். நெருக்கமானவர்களின் சந்திப்பு நிகழும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. .

கடகம்
கடக மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தாரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். தேக நலனில் அக்கறைகொள்வது அவசியம். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபரங்கள் லாபத்தை தரும்.

சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தில் இருந்து வந்த குழப்பமான சூழ்நிலைகள் மாறும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகமாகும். பண வரவு நன்றாக இருக்கும் தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.

கன்னி
கன்னி ராசி நண்பர்களே,காரிய தடைகள் விலகும். குடும்பத்தில் ஆதரவு பெருகும். சவால்கள், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். பணவரவில் சிக்கல் இருக்கும். உத்யோகத்தில் பதவிகள் தேடி வரும்.தொழில் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும். அடிக்கடி உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்கவும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம்.தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். வேண்டியவர்களின் நட்பு கிடைக்கும். வசீகரப் பேச்சால் காரியம் சாதிக்க முடியும். மனம் தெளிவு பெரும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.

தனுசு
தனுசு ராசி நண்பர்களே, அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். நண்பர்களுடன் நல்லுறவு ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், அலைச்சலும் உண்டு. உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மகரம்
மகர ராசி நண்பர்களே, உறவினர்களுடன் சுமுக உறவு ஏற்படும். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கவும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.இன்றும் சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.

கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்ப பெருமை உயரும். எதிரிகள் விலகியே நிற்பர். அக்கம் பக்கத்தினரிடம் அனுசரித்து போகவும். பண விவகாரங்களில் கவனம் தேவை உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்ப செலவுகளை குறைக்க திட்டமிடவும். ஆடம்பர சிலவுகளால் மன உளச்சல் உண்டாகும்.சமூக அந்தஸ்து வெகுவாக உயரும். வெளி உணவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.