Breaking News :

Tuesday, June 25
.

திருஷ்டிக்கு பூசணிக்காயை ஏன் உடைகிறாங்க?


கூச்மாண்டன்… அரக்கர் குலத்தில் பிறந்த அரும் தவ புதல்வன். அரக்கர்களுக்குள்ள குலவழக்கப்படி வலிய வம்புக்கு போய், தேவர்களை சண்டைக்கு இழுத்தான்.

அரக்கனின் கொடுமை தாங்காத தேவர்கள் தப்பி பிழைக்க ஒரே வழி, வைகுண்டனை சரணடைவது தான் என்று எண்ணி வைகுண்டம் சென்றார்கள்.

புண்ணியதேவனே….. தேவர்கள் இனமே அழிந்து விடும் போலிருக்கிறது. தாங்கள்தான் காத்தருள வேண்டும் என்று கதறினார்கள்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மமே வெல் லும் என்ற பழமொழிக்கு ஏற்ப, அசுரனின் கதை முடியும் நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்தார் நாராயணன்.

உடன் அரக்கன் இருப்பிடம் நோக்கி சென்றார். வந்திருப்பது நாராயணன் என்பதை மறந்தான். தன் பலத்திருக்கு முன் யாரும் வரமுடியாது என்ற ஆணவத்தில் கொக்கரித்தான் கூச்மாண்டன். சண்டைக்கும் தயாரானான்.

அதுசரி…. அழிவுகாலம் வந்துவிட்டால், அறிவு தான் வேலை செய்யாதே.

யுத்தத்தின் இறுதியில் வேரறுந்த மரம் போல் விழுந்தான்.
கூச்மாண்டா…. நல் வழியில் செல்வதற்கு வழி இருந்தும் அழிவை நீயே தேடிக்கொண்டாய். இது உன்பாவத்தின் சம்பளம்.

வேண்டுபவர்களுக்கு எல்லாம் வேண்டும் வரம் தரும் பெருமானே… இனி நான் பிழைக்க போவதில்லை.

எனது கடைசி ஆசையை நீங்கள்தான் வர மாக தர வேண்டும் என்று மரண வாயில் நின்று மண்டியிட்டான்.

சரி கேள்… என்ன வரம் வேண்டும்?

நான் மறைந்தாலும்… என் புகழ் அழியாத வரம் வேண்டும். இதுவரை… உன் வாழ்நாளில் எந்த நன்மையை யும் செய்யாத உனக்கு அழியாத புகழை எப்படி தருவது?

பெருமானே.. நான் இறப்பதை பற்றி கவலைப்படவில்லை. உங்கள் கை யால் மரணம் எய்வதே நான் செய்த பாக்கியம். இருப்பினும் நான் உயிரோடு இருந்த வகையில் எந்த நன்மையையும் செய்ததில்லை.

இறந்த பிறகாவது பிறருக்கு பயன்பட வேண்டும். அதற்கு நீங்கள் தான் அருள வேண்டும்.

சரி…. நீ பூசணிக்காயாக பிறவி எடுப்பாய். உன்னை வாசலில் வைத்தால் சகல தோஷமும் மறையும். கண் திருஷ்டி மறையும்.

பில்லி சூன்யம், ஏவல் கூட பாதிக்காது. அதோடு நீ யாருக்கு தானமாக போகிறாயோ…… அதை தந்தவருக்கு நம்மைகள் கிட்டும்.

அதோடு உன்னை யாராவது பிறர் அறியாமல் திருடி சென்றால் சகல தோஷமும் அவர்களை பிடித்து கொள்ளும்.

அதனால், இன்றும்கூட கிராமங்களில் உரியவர் இல்லாமல் பூசணிக்காயை பறித்து சென்றால் அதற்குரிய பணத்தை பக்கத்தில் வைத்து விட்டு பறித்து செல்வார்கள்.

கண் திருஷ்டி மறைய பூசணிக்காயை வைக்கும் நடைமுறையில் இதனால் வந்தது. அந்த பூசணிக்காயை உடைத்தால் சகலதோஷமும் மறைந்து விடும்.     

1. கோயில் வழிபாடுகள் கும்பாபிஷேகங்கள், வீடுகிரகப்பிரவேஷம் கம்பெனி மற்றும் கடைகள் ஆரமித்தல் போன்ற நிகழ்வுகளுக்கு பூசனிக்காய சுற்றி உடைக்கும் பொழுது  பூசனிக்காயை சுற்றுவதற்க்கு முன் பின்னபடுத்தாமல் சுற்றிய பிறகு உடைத்து அதாவது நீங்கள் உடைக்கும் பூசனிக்காயை பறைவைகள், மாடுகள், குரங்கு மற்றும் பல விலங்கினங்கள் அதை உன்னும் என்பதால் தயவுசெய்து அதில் குங்குமம் காசு போடாமல் பீட்ரூட்டை சீவி அதை உடைத்த பூசனிக்காயில் தடவி சிவந்த நிரமாக மாற்றி போடவும் ஏன்தெரியுமா? எல்லாஉயிர்களும் இன்புற்று வாழவேண்டும் முடிந்த அளவு நாம் செய்வதில் பிற உயிர்களுக்கு நன்மை இருந்தால் அதுவே நமக்கு பண்மடங்கு நன்மை உண்டாகும்.      
                
2. அடுத்து பூசணிக்காயை உடைத்ததும் அதை எடுத்து பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் ஓரமாக தூக்கி போடுவதுதான் மனிதத்தன்மை. எப்பொழுதும் நம்மால் அடுத்தவர்களுக்கு  தீஙாகுவராமல் எதை செய்தாலும் செய்ய வேண்டும்.       
                                                      
3. வியாபார ஸ்தலங்களுக்கும் நமது வீட்டுக்கும் ஸ்பெஷல் பரிகாரம்:-

அதாவது அமாவாசை முன்னால் இரவு பூசனிக்காயை ஓட்டைப்போட்டு அதில் வேரேதுவும் போடாமல்  நவதாணியங்களை மட்டுமே போட்டு வீட்டிலோ அல்லது வியாபாரகூடங்களிலோ ஒரு மூளையில் வைத்துவிட வேண்டும் மறுநாள் சரியாக பகல் 12-மனிக்கு அமாவாசைஇருக்கவேண்டும் அந்த நேரத்தில் சுற்றி உடைத்து அதை எடுத்து ஓடும் நீரில் அல்லது கடலில் வீசவேண்டும் 1000 மடங்கு நன்மை உண்டாகும் தீமைகள் விலகும் நம்மை சுற்றி உள்ளவன் சரியில்லை என்றாலும் நம்மை விட்டு தானாக விலகிவிடுவான்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.