மாதவிடாய் காலங்களில் பெண்கள் தெய்வ வழிபாட்டில் இருந்து ஒதுக்கி வைப்பார்கள். அதை முழுமையாக ஆராய்ந்து பார்த்தால் அச்சமயத்தில் பெண்களின் உடல் அதிகப்படியான உஷ்ணத்தைக் கொண்டிருக்கும்.
கருவறையில் இருக்கு கடவுளின் வெப்பம் தாக்கும் போது அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்படு வதாலேயே இறைவனிடமிருந்து பெண்களை விலகியிருக்க சொன்னார்கள். விலக்கவில்லை.. ஆக இது தீட்டு அல்ல...
குழந்தை_பிறந்த வீட்டில் புரோகிதர் வந்து தீட்டுகழிக்கும் வரை அக்குடும்பத்தினர் கோயிலுக்கு வரக்கூடாது. வெளி ஆட்களும் அவர்கள் வீட்டுக்குச் சென்று வந்ததும் அத்தீட்டை கழிக்க கட்டாயம் குளிக்க வேண்டும். இதுவும் தீட்டு என்கிறார்கள். ஆனால் குழந்தையும் இறைவனும் ஒன்றே என்பது உண்மையானால் இதுவும் தீட்டு அல்ல.
ஆண்_பெண் கலப்பது தீட்டு... அப்படி இருந்தால் குளித்தபிறகே வீட்டில் எந்த வேலையையும் செய்ய வேண்டும் என்பது காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நாம் அனைவருமே இத்தகைய கலப்பிலேயே உருவாகி இருப்பதால் நம் உடல் எப்போதும் தீட்டு ஆகவே இருக்கமுடியும்... ஆனால் அப்படி இல்லா ததால் இதுவும் தீட்டு அல்ல.
இவ்வுலக_வாழ்வை நீத்து ஆன்மா வெளியேறிய பிறகு கிடத்தப்படும் உடல் வெறும் பிணம்.. இந்த பிணத்தைப் பார்த்தாலோ தொட்டாலோ தீட்டு ஒட்டிக் கொள்ளும் என்கிறார்கள்... ஆனால் இவைக்கூட தீட்டு அல்ல.. ஆனால் இவையெல்லாம் தீண்டத்தகாத தீட்டாக தான் பார்க்கிறோம்.
இறைவனை எக்காலத்திலும் அடைய முடியாத தீட்டுகள் எவை தெரியுமா? பஞ்சமாபாதங்கள் என்றழைக்கப்படும் காமம், குரோதம், லோபம், மதம், மாற் சரியம் போன்றவைதான்.
பெண்ணோ பொருளோ அதன் மீது ஆசை வைத்து அடைய வேண்டும் என்று சதாசர்வ காலமும் இறைவனை நினைக்கக்கூட நேரமில்லாமல் மனம் முழுக்க அதையே நினைத்து வாழ்வது காமத்தீட்டு.
இவை இறைவனுக்கு ஆகாத தீட்டு...
கோபத்தை விட கொடியது உலகில் ஏதும் இல்லை. சுய அறிவை இழந்து சுற்றியிருப்பவர்கள் தாய் தந்தையராக இருந்தாலும் கொடூரமாக பேசுவதும், உணர்ச்சிவசப்பட்டு வன்மத்தோடு செயல்படுபவர்களும் இறைவனை நினைக்க மாட்டார்கள். இந்த குரோதத்தீட்டு இறைவனுக்கு ஆகாதது.
தன்னலம்_மட்டுமே கருதி வாழ்பவர்கள் லோகத்தில் இருக்கும் அத்தனை வழி களிலும் அதர்மம் செய்தாவது பொருள் ஈட்ட நினைப்பார்கள். மனம் முழுக்க தன்னலம் இருக்கும் போது இறைநலம் பற்றி சிந்திக்க மாட்டார்கள். இத்தகைய சுய நலமிக்க லோபத்தீட்டும் இறைவனுக்கு ஆகாது.
தாம்தான் பெரியவன் என்று திமிர் பிடித்து கர்வம்கொண்டு இருப்பவன் பிறரை துன்புறுத்தியே மகிழ்ச்சி காணுவான். இறைவனை நினைக்கவே இயலாத இத்தகைய மதத்தீட்டை கொண்டவனும் இறைவனுக்கு ஆகாத தீட்டை உடையவனே...
பிறர் வாழ்வதை பொறுக்காமல் மனதுக்குள் குமுறும் எண்ணத்தைக் கொண்டவன் மாற்சரிய தீட்டைக் கொண்டிருக்கிறான்.
எப்போதும் எரிச்சலும்... பிறரை பார்த்து புகைவதும்... என்றிருப்பவனால் இறைவனை தூய்மையாக நினைக்க முடியாது ஆக இவனும் இறைவனை அண்ட முடியாத தீட்டை உடையவன்.
இந்தத்_தீட்டுகளைக் கொண்டிருப்பவனைத் தீண்டத்தகாதவனாக இறைவனே ஒதுக்கிவிடுவதால் நாம் இறைவனை நெருங்க தீட்டில்லாமல் பார்த்து கொள்வோம்.