Breaking News :

Wednesday, December 04
.

கல்வியில் சிறக்க புதன் பகவானுக்கு பரிகாரம் என்ன?


புதன் பகவான் நம் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் சிறந்த அறிவாளியாகவும், நல்ல படிப்பறிவுள்ளவராகவும், இறைவனிடத்தில் சிந்தனையுள்ளவராகவும் இருப்பார்கள்,

புதன் பகவான் வலு குறைந்து இருந்தால் கல்வி போன்ற விஷயங்களில் சரியான நாட்டம் இருக்காது. மேலும் சிலருக்கு திடீர் மரணத்தை தரும் மாரகாதிபதியாகவும் புதன் இருக்கிறார். புதன் பலம் இல்லையென்றால் இது போன்ற விஷயங்கள் சிலருக்கு நடக்கலாம்.

புதனை ஜாதக ரீதியாக பலப்படுத்திக்கொள்ள, புதன் பகவானுக்கு உரிய நாள் புதன் கிழமை அன்று விரதம் இருந்து பச்சை ஆடை அணிந்து, புதன் பகவானுக்கும் பச்சை ஆடை அணிவித்து வழிபட வேண்டும்.

நாயுருவியை காயவைத்து அதை தூபமாக காட்டலாம். பின் பச்சைப் பயறு பொடி அன்னம், பச்சைப் பருப்பு கலந்த பொங்கல் இவற்றை புதன் பகவானுக்கு நிவேதனம் செய்து, மற்றவர்களுக்குத் தானம் செய்ய வேண்டும்.

புதன் பகவானை நாட்டக்குறிஞ்சி ராகத்தில், புதன் பகவான் கீர்த்தனைகளைப் பாடி பிரார்த்தனை செய்து கொள்ளலாம். புதனுக்கு விடியற்காலையில் முறைப்படி சாந்தி செய்து, ஸ்கந்த புராணம், புதன் கவசம், புதன் ஸ்தோத்திரம், புதன் காயத்திரி ஆகியவைகளைப் பாராயணம் செய்தால் புதன் அருளைப் பெறலாம்.

ஜாதகத்தில் புதன் தோஷம், லக்கினம் அல்லது சூரியன் அல்லது 6,8-ம் இடங்களுக்கு ஏற்பட்டிருந்தால், சிகிச்சை அளித்தும் நோய் குணம் ஆகாமல் நீடிக்கும். இத்தகைய தோஷத்திற்கு புதன்கிழமைகளில் விரதமிருந்து ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கு அபிஷேகம் செய்து, தீபம் ஏற்றினால் மருந்து சாப்பிடும் பலன் அளிக்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.