Breaking News :

Wednesday, November 06
.

புரட்டாசி மாத பௌர்ணமி பலன்கள்


புரட்டாசி மாதம் என்பது வழிபாட்டுக்குரிய மாதம். அந்த மாதம் முழுவதுமே பெருமாளை நினைத்து தியானிப்பதும், ஆலயத்திற்கு சென்று தரிசிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபடுவதும் விசேஷமானது.

புரட்டாசி மாத பௌர்ணமியில் பெருமாளையும், குலதெய்வங்களையும் மனதார வழிபட்டு வந்தால் மகத்தான பலன்களைப் பெறலாம்.

புரட்டாசி பௌர்ணமி அன்று அம்பாளை பிரம்மன், விஷ்ணு, இந்திரன் முதலியோர் போற்றித் துதித்தனர். அதன் விளைவாக குளிர்ச்சியான ஒளி பொருந்திய முகத்துடன் பௌர்ணமியில் சாந்த சொரூபிணியாக அன்னை காட்சியளித்தாள்.

புரட்டாசி மாத பௌர்ணமியான இன்று விரதமிருந்து மாலை சந்திர உதயத்தில் நிலவையும், அம்பாளையும் தரிசனம் செய்ய வேண்டும்.

இந்நாளில் குலதெய்வ வழிபாடு மிக மிக முக்கியமானது. மேலும் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் நன்மைகள் கிடைக்கும் மற்றும் சந்ததியினர் சிறக்க வாழ்வார்கள்.

புரட்டாசி பௌர்ணமி தினத்தில் வீட்டில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவதாலும், அருகிலுள்ள சிவாலயங்களுக்கு சென்று வில்வ அர்ச்சனை செய்து, நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடுவதாலும் விசேஷ பலன்கள் உண்டாகும்.

புரட்டாசி பௌர்ணமி தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும், தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள்.

பௌர்ணமியின் சிறப்புகள் :

புரட்டாசி பௌர்ணமி தினத்தில் காலை வேளையில் சிவபெருமானை வழிபாடு செய்தால், முற்பிறப்பில் செய்த பாவங்கள் நீங்கும்.

நண்பகலில் சிவபெருமானை வழிபாடு செய்தால், முற்பிறப்பில் செய்த பாவங்கள் மட்டுமில்லாமல், இந்த பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும்.

மாலை வேளையில் சிவனை வழிபாடு செய்தால், சிவபெருமானின் அருளால் ஏழேழு பிறவிகளில் செய்து முற்றிய பாவங்கள் அனைத்தும் நீங்குவதுடன், விரும்பிய எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும் என்பதே புரட்டாசி மாத பௌர்ணமி நாளின் சிறப்பாகும்.

பலன்கள் :

புரட்டாசி மாத பௌர்ணமி நாளில் சிவபெருமானை வழிபடுவது பலவிதமான பாவங்களைப் போக்கும்.

புரட்டாசி பௌர்ணமியன்று விரதமிருந்து வழிபடுபவர்கள் தங்கள் வாழ்வில் மேற்கொள்ளும் எல்லாக் காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.