பூரம் முடக்கு நட்சத்திரமாக இருந்தால் வழிபட வேண்டிய தெய்வம்:
ஒருவரின் பிறந்த கால ஜாதகத்தில் சூரியன் அஸ்வினி நட்சத்திரத்தில் நின்றால் அவருக்கு பூரம் நட்சத்திரம் முடக்கு நட்சத்திரம் ஆகும்.
அவரின் பிறந்த கால ஜாதகத்தில் பூரத்தில் ஏதேனும் கிரகம் இருப்பின்
அந்த கிரகம் செயல்படாமல் முடங்கும்.
அதாவது அந்த காரகத்துவத்தின் பலனை ஜாதகர் பெற இயலாது.
பூரம் நட்சத்திரம் சுக்கிரனை குறிக்க கூடியது.
சுக்கிரன் மகாலெட்சுமியை குறிக்க கூடிய கிரகம்.
திருவரங்கம் சுக்கிரனுடைய ஸ்தலம் .
திருவரங்கத்தில் உள்ள அன்னை மகாலெட்சுமியை தொடர்ந்து வழிபட்டு வந்தால் சுக்கிரனின் முடக்கு நீங்கிய சீரான வாழ்வு அமைவது உறுதி.
எப்படி வழிபடுவது?
ஓருவர் தொடர்ச்சியாக திருவரங்கத்தில் உள்ள மகாலெட்சுமியை வழிபட்டால் அவரின் முடக்கு நீங்கும்.
வெள்ளி கிழமையில் வழிபடலாம்
அவரவர் யோக நட்சத்திரத்தில் வழிபடுவது மிகுந்த நற்பலனை வழங்கும்.