Breaking News :

Sunday, April 28
.

பித்துரு தோஷம் நீங்க பூஜை, பரிகாரம் என்ன?


தோஷத்தில் மிக கொடிய தோஷம் பித்துரு தோஷம்.

 

தோஷம் வரக்காரணம் :

 

1.கருச்சிதைவு

 

2. பெற்றோர்களை இறுதிக்காலத்தில் கவனிக்காதது.

 

3.இளைய தாரத்துப்பிள்ளைகள் மூத்தோருக்கு திதி தராதது.

 

4.தந்தைக்கு எத்தனை தாரம் இருந்தாலும் அனைவருக்கும் தவறாமல் திதி தர வேண்டும்.

 

5. ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர், ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும்.

 

6. துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயாசென்று கூபசிரார்த்தம் செய்யாவிடில் பித்துரு தோஷம் வரும்.

 

குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்துருக்கள் என்கிறோம்.அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்துருதோஷம்.

 

ஜாதகத்தில் கண்டறிவது :

 

ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்துருதோஷம் உண்டு.

 

பரிகாரம் :

 

ராமேஸ்வரம் சென்று திலஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும்,காசி, அலகாபாத் சென்று திவசம் செய்வதும் , திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்திற்குப்பரிகாரம்.

 

திலஹோமம் :.

 

குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ அல்லது தற்கொலை செய்துகொண்டிருந்தாலோ மட்டும் தில்ஹோமம் செய்ய வேண்டும்.

அனைவரும் இயற்கை மரணம் அடைந்திரிந்தால் திலஹோமம் செய்ய வேண்டியதில்லை.

 

தோஷ்த்தினால் ஏற்படும் தீயவிளைவுகள் :

 

தோஷம் உள்ளவர்களுக்கு

 

1.திருமணம் நடக்காது அல்லது மிகவும் தாமதமாக நடக்கும்.

விவாகரத்து ஏற்படலாம் அல்லது அன்னியோன்னியம் இராது.அல்லது குழந்தைபாக்கியம் இருக்காது.

 

2. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதை.மனநோய் காரணமாக தாம்பத்ய வாழ்க்கை பாதிக்கும்.

 

3.ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.

 

4. கலப்புத்திருமணம் , ரகசியதிருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.

 

இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிஷ்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப்பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்துருக்களும், பித்துரு தேவதைகளும் தடை செய்கிறார்கள்.

 

பித்துருக்களின் சாபம் கடவுள் நமக்கு தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் தன்மையுடையது.

 

பரிகாரம்:

 

சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்யவும்.இந்த அபிஷேகம் அமாவாசையன்று செய்யவும்.இந்த அபிஷேகத்தைப்பார்த்த நாள் முதல் உங்கள் பித்துருதோஷம் விலகும்.

 

சிவன் கோயில் சென்று அபிஷேகம் செய்ய இயலாதவர்கள் 100 கிராம் பச்சரிசி, அகத்திக்கிரை, 50 கி கருப்பு எள், 100 கி வெல்லம், வாழைக்காய் ஆகியவற்றை அமாவாசை அன்று பசுமாட்டிற்கு கொடுக்க பித்துரு தோஷம் நீங்கும்.

தொடர்ந்து 9 அமாவாசைக்கு இந்த எளிய பரிகாரத்தை செய்ய வேண்டும்.இதனால் பித்துரு தோஷம் முழுமையாக நீங்கும்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.