Breaking News :

Thursday, May 16
.

பௌர்ணமி நாளின் சிறப்புகள்


1) சித்ரா(சித்திரை) பௌர்ணமி – சித்ரகுப்தனின் பிறந்தநாள்

 

2) வைகாசி பௌர்ணமி – முருகனின் பிறந்தநாள்.

 

3) ஆனிப் பௌர்ணமி – இறைவனுக்கு கனிகளை படைக்கும் நாள்.

 

4) ஆடிப் பௌர்ணமி – திருமால் வழிபாடு

 

5) ஆவணிப் பௌர்ணமி – ஓணம், ரக்சாபந்தனம்

 

6) புரட்டாசி பௌர்ணமி – உமாமகேசுவர பூசை

 

7) ஐப்பசி பௌர்ணமி – சிவபெருமானுக்கு அன்னா பிசேகம்

 

8) கார்த்திகை பௌர்ணமி – திருமால், பிரம்மா ஆகியோர் சிவ பெருமானின் அடிமுடி காண முயன்ற நிகழ்வு

 

9)மார்கழிப் பௌர்ணமி- சிவபெருமான்நடராஜராக ஆனந்ததாண்டவம் ஆடிய நாள்

 

10) தைப் பௌர்ணமி – சிவபெருமானுக்கு பெருவிழா நடத்தும் நாள்

 

11) மாசிப் பௌர்ணமி – பிரம்மனின் படைப்பு தொழில் துவங்கிய நாள்

 

12)பங்குனி பௌர்ணமி-சிவபெருமான் உமையம்மை திருமண நாள் பரிகாரம் செய்தால் எவ்வளவு மோசமான கர்மவினை பாதிப்பில் இருந்தும் தப்பித்து சுபிட்சமான வாழ்வை அடையலாம்.

 

உத்தராயண புண்ணிய காலம் என்பது சூரிய பகவான் மகர ராசியில் நுழைந்தவுடன் துவங்கி மிதுன ராசியில் சஞ்சரிக்கும் வரையில் இருக்கும்.. அதாவது தைமாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாதங்கள்...

 

இந்த மாதங்களில் வரும் பௌர்ணமி நாள் ஆனது மிகவும் சக்தி வாய்ந்த நாள் ஆகும்... அதாவது மிகவும் ஒளி மிகுந்த நாட்கள் ஆகும்....

 

(ஆறு மாதமும் பௌர்ணமி தின அன்று முன்கூட்டியே வேலை செய்யும் இடத்தில் விடுமுறை வாங்கி கொள்ளவும்)

 

அன்றைய தினம் உங்களால் காலை முதல் மதியம் வரை பகல் நேரத்தில் எவ்வளவு நேரம் உங்களால் சூரிய ஒளியில் இருக்க முடியுமோ அதுவரை சூரிய ஒளி உங்கள் மேல் படுமாறு இருக்க வேண்டும்.

 

மாலை பௌர்ணமி கிரிவலம் செல்ல வேண்டும்....

 

(அதாவது சூரியன் மகரத்தில் இருந்தால் அதற்கு நேர் ஏழில் கடகத்தில் சந்திரன் இருக்கும்... இவ்வாறாக ஆறு மாதம் செய்யும் போது உங்களது ஜாதகத்தில் உள்ள 12 ராசி களும் ஒளி பலம் பெறும்)

 

இது போல ஒவ்வொரு வருடமும் இந்த 6 நாட்களில் பௌர்ணமி கிரிவலம் சென்றால் உங்களது நெகட்டிவ் எனர்ஜி நீங்கும். வாழ்வில் மிகவிரைவில் முன்னேற்றங்கள் உண்டாகும்...

 

சரியான வேலை இல்லாதவர்கள் தைமாதம் பௌர்ணமி அன்றும்,

 

குழந்தை இல்லாதவர்கள், குழந்தை மூலம் மகிழ்ச்சி இல்லாதவர்கள் மாசி மாதம் பௌர்ணமி அன்றும்,

 

நோயால் அவதியுறுபவர்கள் பங்குனி மாதம் பௌர்ணமி அன்றும்

 

திருமணம் ஆகாதவர்கள், கர்ம வினை அதிகம் உள்ளவர்கள், கடினமான வேலை செய்பவர்கள் சித்திரை மாத பௌர்ணமி அன்றும்,

 

பொருளாதார வசதி குறைந்தவர்கள் வைகாசி மாத பௌர்ணமி அன்றும்

 

இறையருள் வேண்டுபவர்கள், சகோதர உறவுகள் புலப்பட ஆனி மாதம் பௌர்ணமி தினம் அன்றும் கிரிவலம் செல்லலாம்....

 

எனவே ஒவ்வொருவரும் மறக்காமல் வருடத்தில் ஆறு தினம் மட்டும் பௌர்ணமி கிரிவலத்தை மறக்காதீர்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.