Breaking News :

Wednesday, December 04
.

மூல நட்சத்திரம் மாமனாருக்கு ஆபத்தா?


ஒரு குழந்தை பிறக்கும் போது, அந்தக் குழந்தையின் ராசி, நட்சத்திரம், நேரம் ஆகியவற்றை கணித்து கொண்டு அந்த குழந்தையின் எதிர்கால வாழ்க்கைக்காக ஜாதகம் ஒன்றை தயாரிப்பார்கள்.

அதிலும் மூலம் நட்சத்திரம் என்றால் அனைவரும் கவலை கொள்வார்கள் அதற்கு காரணம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாமனார் இருக்க கூடாது. எனவே அவர்களுக்கு வரன் கிடைப்பது மிகவும் கஷ்டம் என்று கூறுவார்கள்.

மூலம் நட்சத்திரத்தில் ஒளிந்திருக்கும் ரகசியத்தின் உண்மைகள் என்ன என்பதை இப்போது தெரிந்துக் கொள்வோம்.

மூலம் நட்சத்திரத்தின் உண்மை ரகசியம்

27 நட்சத்திரங்களின் வரிசையில் 19 ஆவது இடத்தை பெறுவது மூலம் நட்சத்திரமாகும். இந்த மூலம் நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான்.

இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. மேலும் இந்த மூலம் நட்சத்திரம் தனுசு ராசிக்கு உரியதாகும். மூலம் நட்சத்திரம் வாயு புத்திரான ஸ்ரீ ஆஞ்சநேயரின் அவதார நட்சத்திரமாகும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இல்லறம் மற்றும் ஆன்மீகத்திற்குரிய காரியங்களை தவறாமல் ஒழுங்காக செய்வார்கள். ஒழுக்க சீலர்கள் கம்பீரமான தோற்றமும், தெய்வ பக்தியும் எந்த பிரச்சனைகளையும் தைரியத்துடன் எதிர் கொள்ளும் நெஞ்சுரமும் கொண்டவர்கள்.

ஆனி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சந்திரனை குருபார்வை செய்தால் நற்பலன்கள் தேடி வரும்.

மூல நட்சத்திரம் மாமனாருக்கு ஆபத்தா?

மூல நட்சத்திர பெண் சிறு வயதில் இருந்தே புத்திசாலியாக இருப்பதால், அவள் திருமணம் செய்து, வாழ்க்கை நடத்த புகுந்த வீடு செல்லும் பொழுது அங்கு தனது புத்தி சாலி தனமான நடவடிக்கையால் எல்லோரையும் கவர்ந்து விடும் தன்மை கொண்டவராக இருப்பார்கள்.

மேலும் நிர்வாக திறமை அதிகமாகவும் இருப்பார்கள். இதனால் இதுவரை குடும்ப நிர்வாகத்தை கவனித்து வந்த தனது கணவர் மற்றும் மாமனாருக்கு, தனது நல்ல ஆலோசனை சொல்வார்கள்.

அப்பொழுது கணவன் ஏற்றுகொள்ளும் தன்மையுடன் இருப்பார், ஆனால் மாமனார் ஏற்றுக் கொள்ள மறுப்பார் இதற்கு காரணம் நேற்று வந்தவள் எனக்கு ஆலோசனை சொல்வதா என்று நினைப்பார்.

இதனால் மாமனாருக்கும், மருமகளுக்கும் அதிகாமாக சண்டை சச்சரவுகள் ஏற்படுவதால் ஜோதிடத்தின் மூலம் நட்சத்திரம் உள்ள பெண்களால் மாமனார் இறந்து விடுவார் என்று குறிப்பிடுகின்றனர்.

எனவே மூலம் நட்சத்திரம் உள்ள பெண்களால் மாமனாருக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்பதே உண்மை ஆகும்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.