Breaking News :

Monday, January 13
.

மகரம் - ஆங்கில புத்தாண்டு 2025 ராசி பலன்கள் பரிகாரங்கள்


மகர ராசி நண்பர்களே இந்த 2025 ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை காண்போம் பொதுவாகவே மகர ராசிக்காரர்களுக்கு குடும்பத்தின் மேல் அதிக பாசம் இருக்கும் தான் கஷ்டப்பட்டாலும் மற்றவர்கள் மனம் கோணாத அளவுக்கு நடந்து கொள்வார்கள் இவர்கள் அவ்வளவு இடத்தில் யாருக்கும் வாக்கு கொடுக்க மாட்டார்கள் வாக்கு கொடுத்து விட்டால் அதை எப்படியாவது முடித்துக் கொடுத்து விடுவார்கள் இவர்களுக்கு வாழ்வின் முற்பகுதி விட பிற்பகுதி தான் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும் மகர ராசிக்கு இரண்டாம் இடமான தின குடும்ப வாக்கு ஸ்தான அதிபதி சனிபகவான் என்பதால் அதிக அளவில் பணம் வைத்திருந்தாலும் திடீரென்று ஏற்படும் செலவலுக்காக பணத்தை தேடுவார்கள் பொருளாதாரத்தை பொறுத்தவரை ஏற்ற இறக்கம் இருக்கவே செய்யும் வாழ்க்கை துணையை பற்றி சொல்லும் ஏழாம் இடத்திற்கு அதிபதியாக சந்திரன் வருகிறார் இவருடைய வாழ்க்கை துணை ரசனை மிக்கவராக இருப்பார் இவர்களை விட நிதானமாக யோசித்து செயல்படுவர்களாக  இருப்பார்கள்.

ஏழரை சனியின் தாக்கம் வரும் மார்ச் மாதம் வரக்கூடிய சனி பெயர்ச்சியில் முடிவுக்கு வரும் அடுத்த 2 .1/2 ஆண்டுகளுக்கு உங்கள் ராசிகாகு சனிபகவான் நன்மைகளை வாரி வழங்குவார் 3-ம் இடமான உபஜெய ஸ்தானம் என்பது வெற்றியை குறிக்கும் இடமாக கருதப்படுகிறது அசுபத்தன்மை பெற்ற கோள்கள் மூன்றாம் இடத்தில் அமர்வதால் நன்மைகள் பல செய்வார்கள் இதுவரை இருந்து வந்த கடன் சுமைகள் குறையும் புதிய தொழில் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும் பூர்வீக சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும் ஆதாயம் தேடித்தரும் .பண வரவுகள் நன்றாக இருக்கும் புதிய சொத்து சேர்க்கை உண்டாகும் வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.

வரும் மே மாதம் வரை ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்து குருபகவன் பல நன்மைகளை வழங்கி வருவார் குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் நடக்கும் தொழில் வருமானம் நன்றாக இருக்கும் புதிய முதலீடுகளால் லாபம் பன்மடங்கு உயரும் கணவன் மனைவி உறவு பலப்படும் பணம் ஆபரண சேர்க்கை உண்டாகும்.

10-05-2025 ல் குரு பகவான் ஐந்தாம் இடத்தில் இருந்து ஆறாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் இந்த குரு பெயர்ச்சியானது 6-ம் இடத்திற்கு வருவதால் பெரிய நன்மைகளை வழங்காது குருபகவான் சுபத்துவம் பெற்ற கோள் என்பதால் பெரிய தீமைகளை தர மாட்டார் மற்ற கோள்கள் செய்யும் அசுபத்தன்மையை தடுக்கவும் மாட்டார் வீண் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது தேவையில்லாத பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம் உறவினர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை.

மே மாதம் வரை ராகுபகவான் ராசிக்கு 3-ம் ஸ்தானத்தில் சஞ்சரிப்பார் மூன்றாம் இடம் என்பது நற்பலன்களை தரக்கூடிய இடமாகும் வெளிநாடு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் திடீர் பணவரவுகளால் பண தேவைகள் பூர்த்தியாகும் வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெளிநாடு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வெளிநாடு தொடர்புடைய தொழில் மூலமாக நல்ல லாபத்தை பெறலாம் பங்குச்சந்தை டிரேடிங் ஆன்லைன் வியாபாரங்கள் நல்ல லாபத்தை தரும் 29-03-2025 ல்
ராகு+கேது பெயர்ச்சியில் ராகு இரண்டாம் இடத்திற்கு பின்னோக்கி வருகிறார் இதனால் தன விரையங்கள் உண்டாகும் யாரையும் எளிதாக நம்பி விடாதீர்கள் அந்நிய மொழிக்காரர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள் தேவை இல்லாமல் கடன்கள் வாங்குவதை தவிருங்கள்.

ராசிக்கு 9ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் ராகு கேது பெயர்ச்சியில் அஷ்டமஸ்தானமான எட்டாம் இடத்திற்கு வருகிறார் வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது மெதுவாக செல்லுங்கள் தேவையில்லாத சிக்கல்களை உருவாக்கிக் கொள்ளாதீர்கள் பெரிய மனிதர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம் ஆன்மீக எண்ணங்களும் கோயில் வழிபாடு தலங்களுக்கும் சென்று வருவதால் மனதில் உள்ள பாரங்கள் குறையும் மன மகிழ்ச்சி உண்டாகும்.பண முதலீடுகளில் கவனம் செலுத்தவும்.
பங்காளிகளுக்குள் சொத்து பிரச்சனைகள் கோர்ட் வழக்கு என அலைகழிக்கப்படுவீர்கள்
கவனம்.

பெண்களுக்கு!

தேவையற்ற ஆடம்பர செலவுகள் குறைக்கவும் கணவன் மனைவிக்குள் விட்டு கொடுத்து போவது நல்லது குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை மேலோங்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு!

வேலை மாற்றங்கள் உண்டாகும். வேலையில் திருப்தி காணப்படும்.
வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்ப்படும் மேல் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு!
ஞாபக சக்தி அதிகமாக காணப்படும் இந்த கல்வி ஆண்டில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்
படிப்பில் முழு கவனத்தை செலுத்துங்கள் வெற்றி நிச்சயம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு அர்ச்சனை செய்து வாருங்கள் இயலாதவர்களுக்கு உணவு வழங்கி வாருங்கள் அமாவாசை திதியில் இறந்துபோன முன்னோர்களுக்கு படையல் வைத்து வழிபாடு செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.
-----------------

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.