Breaking News :

Monday, January 13
.

கன்னி - ஆங்கில புத்தாண்டு 2025 ராசி பலன்கள் பரிகாரங்கள்


இந்த 2025 ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை காண்போம்.

பொதுவாகவே கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புவார்கள், உலக விஷயங்களை தெரிந்து கொள்வதில் இவர்களிடம் அதிக ஆர்வம் இருக்கும் பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்ப்படுத்த மாட்டார்கள் குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்து விட வேண்டும் என்று நினைப்பார்கள் இவர்களை யாரும் அவர்களை எளிதில் ஏமாற்றி விட முடியாது எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சுக சௌகரியங்களை ஆராய்ந்து செயல்படுவார்கள்.நளினமாக பேசி காரியத்தை சாதித்துக்கொள்ளும் வல்லமை பெற்றவர்கள்.மிக கடினமான உழைப்பாளிகளாக இருப்பார்கள்.  கலைத்துறையை அதிகம் நேசிப்பார்கள்.

வரும் மே மாதம் வரை

குருபகவான் ராசிக்கு 9-ம் இடமான பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்து பல நன்மைகளை தந்து கொண்டிருப்பார் குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் நடக்கும் பண வருகை நன்றாக இருக்கும் கணவன் மனைவிக்குள் நல்ல உறவு காணப்படும் குடும்பத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டி வரும் சொத்து சேர்க்கை உண்டாகும்.

மே மாதம் பத்தாம் தேதி வரக்கூடிய குரு பெயர்ச்சி ஆனது 9-ம் இடத்தில் இருந்து 10-ம் இடத்திற்கு வருகிறார் இதனால் தொழில் வியாபாரத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டிய சூழல் உருவாகும் தொழில்களுக்காக புதிய முதலீடுகள் எதையும் போடக்கூடாது வரக்கூடிய வருமானம் வந்து கொண்டே இருக்கும் அந்த காலகட்டங்களில் ஆடம்பர செலவுகளை குறைத்து பண சேமிப்பில் ஆர்வம் காட்டுங்கள் விரைய செலவுகள் தவிர்ப்பது நல்லது.

சனிபகவான் மார்ச் மாதம் வரை  உபஜெய ஸ்தானமாக கருதப்படும் 6-ம் இடத்தில் அமர்ந்து பல நன்மைகளை தருவார் மார்ச் மாதம் 21ஆம் தேதி வரக்கூடிய சனி பெயர்ச்சியில் ராசிக்கு 7-ம் இடத்திற்கு செல்கிறார் இதனால் குடும்ப உறவு முறைக்குள் மனக்கசப்புகளும் சங்கடங்களும் வரக்கூடும் கணவன் மனைவிக்குள் தேவையில்லாத மனஸ்தாபங்களும் சண்டைகளும் வரக்கூடும் ஈகோ தலைதூக்கும் பண விவகாரங்களில் மிகுந்த கவனம் செலுத்தவும் சொத்து நிலங்கள் வாங்கும் பொழுது பத்திரப்பதிவுகளில் மிகுந்த கவனம் தேவை பங்காளிகளுக்குள் சொத்து பிரச்சனைகளும் வரக்கூடும் அவசர முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை.பெரிய மனிதர்களை பகைத்துக்கொள்ளாதீர்கள்.

18- 5 -2025 ஆம் ஆண்டு ராகு+ கேது பெயர்ச்சியில் 7-ம் இடத்தில் இருந்த ராகுபகவான் ராசிக்கு 6-ம் இடத்தில் பின்னோக்கி வருகிறார் சனிபகவான் கொடுத்த நற்பலன்களை ராகுபகவான் கொடுப்பார் எதிர்பாராத பண வரவுகள் வரக்கூடும் கொடுத்த பணம் வசூல் ஆகும். பணத் தேவைகள் பூர்த்தியாகும் நினைத்த காரியம் யாவும் நடக்கும் வேலை இழந்தவர்களுக்கு புது வேலை வாய்ப்புகள் உருவாகும் பங்குச்சந்தை முதலீடுகள் பன்மடங்கு லாபத்தை  தரும் ஆன்லைன் வியாபாரங்கள் களைக்கட்டும் வெளிநாடு வேலை வாய்ப்பு உருவாகும் வெளிநாடு வேலைக்கு  முயற்சி செய்பவர்கள் நல்ல பலன் கிடைக்கும் மருத்துவ விரைய செலவுகள் குறையும் .

அலோபதி மருத்துவம் மெடிக்கல்
கலைத்துறை புகைப்பட கலைஞர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

ராகு+கேது பெயர்சியில் 12-ம் இடமான விரைய ஸ்தானத்துக்கு செல்கிறார் கேதுவால் இந்த வருடம் நன்மைகள் எதுவும் நடக்காது ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் கோயில் வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வருவீர்கள் சுப விரைய செலவுகள் உண்டாகும் யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள் பணம் மோசடி கும்பலிடம் சிக்கிக் கொள்ள நேரிடும் சேமிப்பு பணத்தை தனியார் நிறுவனங்களிடம் டெபாசிட் செய்யாதீர்கள் தனிமனிதரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் பத்திரப்பதிவுடன் கொடுப்பது நல்லது.

சோம்பல் அதிகமாக காணப்படும்.
உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.

பெண்களுக்கு!
வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும் வீண் புகழ்ச்சிக்கு மயங்கி விடாதீர்கள் கணவன் மனைவியிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது ஆடம்பர செலவுகளை குறைப்பது நலம்.
உத்தியோகஸ்தர்களுக்கு!

சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
தேவையில்லாத விவகாரங்களில் தலையிட்டு கெட்ட பெயர் வாங்க வேண்டாம்.பணியிடை மாற்றங்கள் செய்ய வேண்டாம்.

மாணவர்ளுக்கு!
இந்த கல்வி ஆண்டில் தடுமாற்றம் ஏற்படும் அதிக மதிப்பெண்கள் பெற கடுமையாக போராட வேண்டிவரும்.

படிப்பில் முழு கவனத்தை செலுத்தவும்.அதிகாலை நேரமான பிரம்ம முகூர்த்த நேரத்தில் படிக்க தொடங்குங்கள் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில்
மலை கோவிலில் அமைந்திருக்கும் முருகன் வழிபாடு செய்து வரவும்.
அமாவாசை திதியன்று
குலதெய்வ கோயிலுக்கு சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.