புதன் பலம் பெற்று 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் நினைத்த காரியம் யாவும் வெற்றியை தேடி தரும் பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை தரும்.
ராசிக்கு ஆறாம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் வெளிநாடு வேலை வாய்ப்புகள் தேடி வரும் உடல் ஆரோக்கியம் காணப்படும் மருத்துவரை செலவுகள் கட்டுக்குள் வரும் அன்னிய மொழிகாரர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.
இம்மாதம் சூரியனும் பலம் பெற்று 10 மற்றும் 11ஆம் இடங்களில் சஞ்சரிப்பதால் அரசாங்க ஆதரவும் ஆதாயமும் கிடைக்கும் தந்தை மகன் உறவு பலப்படும் போட்டி தேர்வுகள் வெற்றி பெறுவீர்கள் புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு
ஜூலை 26 ஆம் தேதி வரை சுக்கிரன் 9-ம் இடத்தில் அமர்ந்து நன்மைகளை வழங்குவார் இதனால் கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும் பெண்களால் ஆதாயம் உண்டாகும் உறவினர்களால் நற்ச்செய்தி கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
சனிபகவான் கண்டக ஸ்தானமான ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பதால் யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள் பண விவகாரங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்படவும்.
ராசிக்கு பத்தாம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் தொழில்களுக்காக புதிய முதலீடுகள் எதையும் போடாதீர்கள் வரக்கூடிய வருமானம் வந்து கொண்டே இருக்கும் வேலையில் டென்ஷன் வேலைப்பளு அதிகமாக காணப்படும்.
இம்மாதம் செவ்வாய் 12 மற்றும் ஒன்றாம் இடங்களில் சஞ்சரிப்பதால் முன்கோபம் அதிகமாக காணப்படும் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம் சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும்.
12ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் அடிக்கடி வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவீர்கள் சுப விரயச் செலவுகள் உண்டாகும்.
ஜூலை 18,19,20 சந்திராஷ்டமம்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் வாராஹி அம்மன் வழிபாடு செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.