ராசிக்கு 11 மற்றும் 12 ஆம் இடங்களில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும் தொழில் வியாபாரங்கள் நன்றாக இருக்கும் வரப்புக்கு ஏற்ப செலவுகளும் உண்டாகும்.
இம்மாதம் சூரியன் 12 மற்றும் ஒன்றாம் இடத்தில் பலவீனமாக காணப்படுவதால் அரசாங்கப் பகைகள் வரக்கூடும் தேவையில்லாத விவகாரங்களில் தலையிட வேண்டாம் இம்மாதம் புதனும் ராசிக்குள் இருப்பதால் ஞாபக மறதி அதிகமாக காணப்படும் பண இழப்புகள் உண்டாகும் பங்குச்சந்தை முதலீடுகள் தவிர்ப்பது நன்று.
இம்மாதம் 28-ம் தேதி வரை செவ்வாய் 2-ம் இடத்தில் பலவீனப்படுகிறார் இதனால் முன் கோபம் அதிகமாக காணப்படும் சகோதரர்களிடம் அன்புடன் பழகுங்கள் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
ராசிக்கு இரண்டாம் வீட்டில் கேது செஞ்சுரிப்பதால் உணவு விவகாரங்களில் எச்சரிக்கையாக இருக்கவும் யாருக்கும் தேவை இல்லாமல் ஆலோசனைகளை வழங்காதீர்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் உடல் நல குறைபாடுகள் உண்டாகும் மருத்துவ வீண் விரைய செலவுகளும் உண்டாகும் அன்னிய மொழிக்காரர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள் வேலையிலும் பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
ராசிக்கு 9 ஆம் வீட்டில் சனி பகவான் சஞ்சரிப்பதால் தந்தையார் உடன் அடிக்கடி கருத்து மோதல்கள் உண்டாகும் பூர்விக சொத்துக்களால் பிரச்சனைகளும் வரக்கூடும் பங்காளிகளுக்குள் விட்டுக் கொடுத்து போகவும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
12-ம் இடமான விரைய ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் வீண் ஆடம்பர செலவுகள் குறைக்கவும் தேவையில்லாத பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம்.
ஜூலை 14,15, சந்திராஷ்டமம்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய திங்ட்க்கிழமைகளில் நவகிரக சந்திரனுக்கு அர்ச்சனை செய்து வரவும் பெருமாள் வழிபாடு சிறப்பை தரும் பௌர்ணமி திதியில் வீட்டில் சத்தியநாராயண பூஜை செய்யுங்கள் நல்லதே நடக்கும்.