8ல் புதன் சஞ்சரிப்பதால் மன அமைதி சந்தோஷம் செல்வம், புகழ் கிடைக்கும். கல்வித் திறனை மேம்படுத்தி, கல்வியின் மூலம் செல்வத்தை பெறும் யோகம் கிடைக்கும். புத ஆதித்ய யோகம் பெற்று, சிறந்த கல்விமானாக இருப்பர்.
உச்சமான சுகத்தை அனுபவிக்கும் யோகம் கிடைக்கும். ராசிக்கு 3-ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும்.வெளிநாடு யோக அமைப்பும் உள்ளது.
ஏழாம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் நல்ல லாபத்தை பெறுவீர்கள் கணவன் மனைவி உறவு பலப்படும்
இம்மாதம் சூரியன் 7 மற்றும் 8ம் இடங்களில் பலவீனமாக காணப்படுவதால் அரசாங்க பகைகள் வரக்கூடும் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
இம்மாதம் சுக்கிரனும் 6 மற்றும் 7-ம் இடங்களில் பலவீனப்படுவதால் பெண்களால் அவமானங்கள் வரக்கூடும் குடும்ப உறவினர்களுக்குள் அடிக்கடி சண்டைகள் வரக்கூடும் பண விவகாரங்கள் கவனமாக இருங்கள்.
ஜூலை 28.ம் தேதி வரை செவ்வாய் 9,ம் இடத்தில் பலவீனமாக சஞ்சரிப்பதால் முன்கோபத்தை தவிர்க்கவும் சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும்.
கேதுவும் 9-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் தந்தையாருடன் அடிக்கடி கருத்து வேறுபாடு உண்டாகும் வீண் விவாதங்களை தவிர்க்கவும் அர்த்தாஷ்டம ஸ்தானமான 4-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் தாயாரின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள் தாய், தந்தையுடன் வீண் விவாதங்கள் செய்யாதீர்கள்.
ஜூலை 24,25,26,சந்திராஷ்டமம்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடும்
கால்நடைகளுக்கு தீவனமும் வழங்கி வாருங்கள் நல்லதே நடக்கும்.