Breaking News :

Saturday, July 19
.

தங்க ஆபரணங்களின் அற்புத சக்தி?


1.தங்கம் நவக்கிரஹங்களில்  பூரண சுபகிரகம் என்று சொல்லப்படும் குரு பகவானின் அம்சம்.வளமும் நலமும் தருவது.

2.சஹஸ்ரார சக்கரத்தை இயக்குகிறது மேலும் தீய சக்திகளை விலக்கும்.

3.மோதிரவிரலில் தங்க மோதிரம் அணிவதால் தடைகள் விலகுவதோடு
தெய்வீகச் சிந்தனை பெருகும்.

4.தங்க மோதிரத்தைப் பெண்கள் இடது கை மோதிர விரலிலும்,ஆண்கள்
வலது கை மோதிர விரலிலும் அணிய வேண்டும்.இது அதிர்ஷ்டம் தருவதோடு குழந்தை பாக்கியமும் தரும்.

5.தங்கம் உடலில் உள்ள வெப்பத்தையும்,விஷத் தன்மையையும் நீக்கக்
கூடியது.

6.காய்ச்சல் மற்றும் சளித் தொல்லையால் தொடர்ந்து அவதிப்படுபவர்கள் தங்க மோதிரத்தை சுண்டு விரலில் அணிந்து கொள்ளப் பாதிப்பு குறையும்.

7.பெயர் புகழ் அந்தஸ்து விஷயங்களில் பிரச்சனை இருந்தால் தங்க மோதிரத்தை நடு விரலில் அணிந்து கொள்ளப் பாதிப்புகள் சரியாகும்.

8. நினைவாற்றல் குறைவு மற்றும் மன உளைச்சல் உள்ளவர்கள் தங்க மோதிரத்தை ஆட்காட்டி விரலில் அணிந்து கொள்ளவும்.

9.தம்பத்திகளுக்குள் அந்நியோன்யம் உண்டாக கழுத்தில் தங்க நெக்லஸ் அணியவும்.

10.முற்றிய வயிற்றுநோய்கள் அல்லது பெரிய அளவில் உடற் பருமன் உள்ளவர்கள் தங்க நகைகள் அணிவதைத் தவிர்க்கலாம் அல்லது மிக குறைந்த அளவில் மட்டும் அணிய நல்லது.

11.சனிக்கிரகத்தின் அம்சமான தொழில்களான எண்ணெய்,நிலக்கரி,கரி,
இரும்பு மற்றும் பழைய பொருள் விற்பனை தொடர்பான தொழில் செய்பவர்கள் தங்கம் அணிவதைத் தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம்.

12.கர்ப்பிணிகளும்,வயதானவர்களும் குறைவான அளவில் தங்க நகைகள் அணிவது உடலுக்கு நலம் தரும்.

13.தங்கத்தைக் கனவில் காண்பது பணம் தொடர்பான பிரச்சனைகளைச்  சந்திக்க நேரிடுவதைக் குறிக்கும்.

பழமையான தங்க நாணயங்களை கனவில் காண்பது வேலை அல்லது தொழிலில் பிரச்சனைகளைச்  சந்திக்க நேரிடுவதைக் குறிக்கும்.

14.தங்கம் மகாலட்சுமி மற்றும் குரு பகவானின் அம்சமாகக் கருதப்படுவதால் தங்கத்தை இடுப்பிற்குக் கீழ் அணிவது துரதிர்ஷ்டத்தை  உண்டாக்கும்.

15.குழந்தைகள் தங்கத்தைச் சிகப்புக் கயிற்றோடு கோர்த்து அணிவது நல்லது.

16.தங்கம் அணிந்து கொண்டு மது அருந்துவதும் ,அசைவம் சாப்பிடுவதும் குடும்ப வாழ்வில் நிம்மதியின்மையை ஏற்படுத்தும்.

17.தங்க ஆபரணங்களை சிகப்புப் பட்டு அல்லது காட்டன் துணியில்      முடிந்து லாக்கரில் வைக்கவும்.கிழக்கு அல்லது தென் மேற்கில் வைக்கவும்.

18.மேஷம் ,கடகம்,சிம்மம் லக்கினத்தில் பிறந்தவர்கள் தங்கம் அணிவது உயர்வும்,அதிர்ஷ்டமும் தரும்.
வாழ்க வையகம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.