இந்த பிப்ரவரி மாதம் உங்கள் ராசிக்கு சுக்கிரன் பலம் பெற்று 5-ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும் பெண்களால் நன்மைகள் உண்டாகும் உறவினர்களின் உதவிகள் கிடைக்கும்.புதிய வாகன யோகமும் உண்டு.
7-ம் இடத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் திருமண சுபயோக நிகழ்ச்சிகள் குழந்தை பாக்கியம்
வளைகாப்பு-சீர் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.
11-ம் இடத்தில் கேது இருப்பதால் பயம் அகலும் துணிச்சல் உண்டாகும் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.கோயில் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
பிப்ரவரி 11ம் தேதிவரை புதன் 3ம் வீட்டில் பலவீனமாக காணப்பட்டாலும் 11ம் தேதி முதல் 4ம் வீட்டில் பலப்படுகிறார்.
புத்தி கூர்மையால் எதையும் சாதிப்பீர்கள் கூட்டுத்தொழில் லாபகரமாக அமையும்.
பங்குசந்தை முதலீடுகள் லாபத்தை தரும்.
பிப்ரவரி 13ம் தேதிவரை சூரியன் பலத்துடன் இருப்பார் பெரிய மனிதர்களின் சந்திப்பும் ஆதரவும் கிடைக்கும்.
4-ம் வீட்டில் சனிபகவான் சஞ்சாரம் மனக்குழப்பத்தை ஏற்டுத்தும்.
தாயாரின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.
5-ம் வீட்டில் ராகு இருப்பதால்
புத்திர வகையில் மன கசப்புகளும் சண்டைகளும் வரக்கூடும்
வீண் விரையங்களும் உண்டாகும்.
அஷ்டம ஸ்தானமான 8ம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் அதிக அளவில் கோபத்தை வெளிப்படுத்துவீர்கள்.
புதிய எதிரிகள் முளைப்பார்கள்.
தொழில் வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.
பிப்ரவரி 8,9,10 சந்திராஷ்டமம்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில்.
முருகன் வழிபாடும்.
சஷ்டி & கிருத்திகை விரதம் இருந்து முருக பெருமானை தரிசிக்கவும் நல்லதே நடக்கும்.