இந்த பிப்ரவரி மாதம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை காண்போம்.
ராகு ராசிக்கு 10-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவை நன்றாக இருக்கும் தொழில் வியாபாரங்கள் நல்ல லாபத்தை தரும் வெளிநாடு யோகம் அமையும்.
பிப்ரவரி 11-ம் தேதி வரை புதன் எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் நற்பலன்களை வழங்குவார் பிறகு 9-ம் இடத்தில் பலம் இழக்கிறார் இதனால் ஞாபக மறதி அதிகமாக காணப்படும் பணம் இழக்கும் அபாயம் உள்ளது கவனம்.
இம்மாத கோட்ச்சார பலன்களில் எந்த கோள்களும் பெரிதாக பலனை தரவில்லை அதனால் சற்று எச்சரிக்கையும் முன் ஜாக்கிரதையுடன் செயல்படுவது நல்லது ராசிக்குள் செவ்வாய் இருப்பதால் முன்கோபம் அதிக அளவு காணப்படும் அவசர முடிவுகளை தவிருங்கள்.
ராசிக்கு 12 ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பதால் ஆடம்பர செலவுகள் தவிர்க்கவும் நான்காம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. மருத்துவமனை செலவுகள் உண்டாகும்.
ராசிக்கு 10-ம் வீட்டில் சுக்கிரன் பலவீனமாக காணப்படுவதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் வரக்கூடும் விட்டு கொடுத்து போவது நல்லது வாகனத்தில் மெதுவாக செல்லவும்.
9-ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்து பிரச்சினை வரை கூடும் தந்தையுடன் வாக்குவாதங்கள் தவிர்க்கவும்.
இம்மாதம் சூரியனும் 8 மற்றும் 9-ம் இடங்களில் பலவீனமாக காணப்படுவதால் தேவையில்லாத வம்பு வழக்குகளில் சிக்கி கொள்வீர்கள் தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள் பெரிய மனிதர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
பிப்ரவரி 25,26,27 சந்திராஷ்டமம்
பரிகாரம்.
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு சிறப்பைத்தரும்.