ராசிக்கு 2-ம் ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் தன வரவுகள் நன்றாக இருக்கும் பண தேவைகள் பூர்த்தியாகும் தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்.
ராசிக்கு 3,ம் இடமான உபஜெய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும் தொழில் எதிரிகள் விலகுவார்கள் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் நினைத்த காரியம் யாவுமே வெற்றியை தேடி தரும் போட்டித் தேர்வு எளிதாக வெற்றி பெறுவீர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளை பெறுவீர்கள்.
இம்மாதம் சுக்கிரனும் பலம் பெற்று 12.ம் இடமான விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும் சிலருக்கு புதுவீடு கட்டும் அமைப்பும் உண்டாகும் எளிதில் லோன் கிடைக்கும்.
(சுக்கிரன் துர் ஸ்தானங்களான (12) இடத்தில் நற்பலன்களை வழங்குவார்)
இம்மாதம் சூரியன் 10 மற்றும் 11ஆம் இடங்களில் சஞ்சரிப்பதால் நன்மைகள் உண்டாகும் அரசாங்க அனுகூலங்களும் ஆதரவும் கிடைக்கும் புதிய மனிதர்கள் சந்திப்பு நிகழும் அரசியல் செல்வாக்கு கூடும் வழக்குகள் வாபஸ் ஆகும்.
இம்மாதம் புதனும் வரம் பெற்று சூரியனுடன் 10 மற்றும் 11ஆம் இடத்தில் சஞ்சரிப்பதால் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் புத்தி கூர்மையால் எதையும் சாதித்து காட்டுவீர்கள் கூட்டுத்தொழில் லாபத்தை தரும் பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை தரும்.
இம்மாதம் கேதுவும் ராசிக்கு ஆறாம் இடத்தில் அமர்ந்து இருப்பதால் ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள் வெளிநாடு தொடர்புடைய தொழில்கள் நல்ல லாபத்தை தரும்.
சனிபகவான் அதே 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் புதிய தொழில் மூலமாக நல்ல லாபம் பெறுவீர்கள் நண்பர்கள் உதவிகள் கிடைக்கும் பண தேவைகள் பூர்த்தியாகும்.
இம்மாதம் ராகு மட்டுமே 12-ம் இடமான விரைய ஸ்தானத்தில் அமர்ந்து சிறு விரையங்கள் உண்டு பண்ணுவார்கள் உடல் நலனில் கவனம் செலுத்துங்கள் அன்னியமொழி நபர்களுடம் எச்சரிக்கையாக பழகுங்கள்.
பிப்ரவரி 20,21,22 சந்திராஷ்டமம்.
பரிகாரம்:
வாரம் தோறும் வரக்கூடிய
செவ்வாய்க்கிழமைகளில் மலைக்கேவில் முருகன் தரிசனம்
சிறப்பபை தரும்.
நேரம் கிடைத்தால் அறுபடை தலங்களில் உள்ள எதாவது ஒரு முருகனை தரிசனம் செய்யுங்கள் நல்லது நடக்கும்.