சந்திரன் வளர்பிறையில் ஒளி பொருந்திய சந்திரனாக ராகு-கேது தொடர்பு பெறாத நிலையில், நற்பலன்களை வழங்குகிறார்.
அமாவாசை முடிந்த மூன்றாம் நாளில் இருந்து பௌர்ணமி வரையில் வளர்பிறைச் சந்திரனாக,
நாளுக்கு நாள் ஒவ்வொரு திதியிலும் ஒளி தன்மை அதிகரித்துக் கொண்டே வரும் பொழுது, முழுமையான ஒளிபொருந்திய சந்திரனாக 180' பௌர்ணமி அன்று குருவுக்கு நிகராக சுப தன்மையுடன் செயல்படுவார்.
பவுர்ணமி முடிந்த பஞ்சமி திதி வரை, சுப தன்மையுடனும், பஞ்சமி திதியில் இருந்து அமாவாசை நெருங்கும் வரை தேய்பிறை சந்திரனாக, அமாவாசை அன்று முழுமையாக 0' டிகிரியில் சனிக்கு நிகரான பாவியாக செயல்படுவார்.
எந்த லக்னமாக இருந்தாலும் எந்த ராசியாக இருந்தாலும் எந்த தசா நடந்தாலும் மனதை ஆள்பவன் சந்திரன் என்பதால் அங்கே, மறைமுகமாக மனதை ஆட்கொள் பவராக ,சந்திரனே செயல்படுகிறார்.
ஒரு தசையில் மனம் கெட்டு, கெட்ட செயல்கள் அல்லது சமுதாயத்திற்கு ஒத்துவராத செயல்களை செய்ய வைப்பவரும் சந்திரனே..(குறிப்பாக ஒருவர் வரம்பு மீறிய உறவுகளில் ஈடுபடுவதற்கும் மனம் கெட்டு போதலே காரணம் அங்கே என்ன தான் சுக்கிர தசையை ராகு தசை நடந்தாலும் கூட மறைமுகமாக மனதை கெடுப்பவர் சந்திரன்.
பௌர்ணமி சந்திரன், அல்லது பௌர்ணமி நெருங்கிக்கொண்டிருக்கும் ஒளி பொருந்திய சந்திரனுக்கு கேந்திரங்களில் நிற்கும் கிரகங்களும் சுபத்தன்மை பெறும். அதாவது சந்திரனின் ஒளி சிதறல்கள் மூலம் சுபத்தன்மை பெறும். (ஜோதிடமே ஒளி தத்துவத்தின் அடிப்படையைக் கொண்டவை)
சந்திரன் நீர்நிலைகளுக்கு காரணம் வகிப்பவர். மனதை ஆள்பவர் சந்திரன் என்பதால் மனிதனின் எண்ண ஓட்டங்களும் சந்திரனே காரணம் வகிக்கிறார் ..
அதனால்தான் சாதுக்கள் ரிஷிகள் முதலானவர் நீர்நிலைகளில் தங்களுடைய ஆத்மபலத்தை வெளிப்படுத்துகின்றனர்.
மனிதனின் ஞாபக சக்தி, மன அழுத்தம் (depression) .,அதிகபட்ச விரக்தி, தேவையற்ற பயம், ஆழ்மனதில் பதிந்து போன சகிக்க முடியாத சில விஷயங்கள் முதலானவற்றிற்க்கு சந்திரன் காரணம் வகிக்கிறார் .
நீருடன் இணைந்த குருதியே மனித உடலில் ஆற்றலாக பாய்கிறது
செவ்வாய்+ சந்திரன் சேர்க்கையை குறிக்கிறது ..செவ்வாயுடன் இணைந்த ஒளி பொருந்திய சந்திரன் நற்பலன்களை வழங்குகிறார்.
ராகு கேதுவுடன் இணைந்த சந்திரன் ஒளி பொருந்திய நிலையில் இருந்தாலும் ராகு கேதுவால் கிரகண படுத்தப்பட்ட சந்திரன் .தன்னுடைய தசையில் ஜாதகருக்கு கடுமையான மன உளைச்சலை கொடுக்கிறார் ..மேலும் எந்த ஆதிபத்திய சந்திரன் பெற்றிருக்கிறார் அது சார்ந்த விஷயங்களில் மன அழுத்தங்கள் உருவாகிறது.
இந்த இணைவை குரு பார்க்கும் பொழுது தசை முடிவில் பிரச்சனைகளில் இருந்து ஜாதகர் வெளி வருவார்.
சந்திரனை பலப்படுத்த பால் தயிர் சம்பந்தப்பட்ட பொருட்களை தானமாக தருதல், விலங்குகளுக்கு தயிர் அன்னம் தருதல், பவுர்ணமி சந்திரன் வழிபாடு சிவ வழிபாடு போன்றவை நற்பலன்களை கொடுக்கும் ..#kirthika#