Breaking News :

Thursday, September 12
.

பிரம்ம முகூர்த்த தீப வழிபாட்டின் ரகசியம் என்ன?


நினைத்ததை நிறைவேற்றி தரும்  பிரம்ம முகூர்த்த தீப வழிபாடாகும்.

தினமும் அதிகாலை 3 மணி துவங்கி 5.30 மணி வரையிலான காலத்தை பிரம்ம முகூர்த்த வேளை என்கிறோம்.  இந்த நேரம் அனைத்து விதமான சுபகாரியங்களும் செய்வதற்கு உகந்த காலமாக சொல்லப்படுகிறது.

பிரம்ம முகூர்த்த காலத்தில் வழிபாடு, படிப்பு, தியானம் என எதை செய்தாலும் அதற்கான முழு பலனும் நமக்கு அப்படியே கிடைக்கும் என்கின்றனர்.

முகூர்த்த வேளை, நல்ல நேரம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தை குறிப்பிட்டாலும் அதிகாலை பொழுதை மட்டுமே பிரம்ம முகூர்த்தம் என சிறப்புப்படுத்தி சொல்கிறோம்.

இதற்கு அறிவியல் ரீதியாக சொல்லப்படும் காரணம், அதிகாலை 3 மணி முதல் 5.30 மணி வரையிலான காலத்தில் சூரியனின் வெப்பமோ, சந்திரனின் குளுமையோ முழுவதுமாக காணப்படாது. மத்திமமான காலநிலையே நிலவும்.

இந்த சமயத்தில் நமது உடல் இயக்கங்கள் சீராக இருக்கும். பதற்றம் இல்லாத அமைதி நிலவுவதால் மனதில் அமைதியை உண்டாக்கும்.
இது நமது மனம் மற்றும் உடலின் இயக்கத்தை சீராக்கி, நம்மை ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

பிரம்மாவையே படைப்பின் கடவுளாக புராணங்கள் சொல்கிறது
தினமும் இரவில் தூங்கும் போது நாம் வேறு உலகிற்கு சென்று விடுகிறோம்.
இதனால் தினமும் காலை கண் விழிப்பதை புதிதாக பிறப்பதற்கு சமம் என்று சொல்கிறார்கள்.

தினமும் பிரம்மாவால் உலக உயிர்களின் சிருஷ்டி துவங்கும் நேரம் என்பதால் இதை பிரம்ம முகூர்த்தம் என குறிப்பிடுகிறோம்.

ஒவ்வொரு நாள் இரவும் தூங்கி, மறுநாள் காலை கண் விழிப்பதே இறைவன் கொடுத்த வரம் என நன்றியுடன் நினைத்து பார்ப்பதற்காகவே அதிகாலை வேளையை பிரம்மாவிற்கு உரிய முகூர்த்தம் என்றும், இது வழிபாட்டிற்கான நேரம் என்றும் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.

படைத்தல், காத்தல், அழித்தல் என மூன்று தொழில்களை செய்யக் கூடிய பிரம்மா, விஷ்ணு, சிவனை குறிப்பிடும் போது மும்மூர்த்திகள் என்கிறோம்.
இவர்களில் விஷ்ணு வழிபாடும், சிவ வழிபாடும் உலகம் முழுவதும் ஓங்கி இருந்தாலும், முகூர்த்தம் என சுப காரியங்கள் செய்ய உகந்த நேரத்தை மட்டும் பிரம்ம முகூர்த்தம் என்கிறோம்.

பிரம்மாவிற்கு என்று தனியாக வழிபாடு கிடையாது என்றாலும், நல்ல காரியங்கள் செய்ய மிக உன்னதமான நேரத்தை பிரம்ம முகூர்த்தம் என குறிப்பிடுகிறோம்.

அதே சமயம் நல்ல காரியங்கள்/ சுப காரியங்கள் செய்வதற்கு மிக உன்னதமான நேரத்தை விஷ்ணு முகூர்த்தம் என்றோ, சிவ முகூர்த்த அல்லது ருத்ர முகூர்த்தம் என குறிப்பிடுவது கிடையாது.

தினமும் அதிகாலை 3 மணி துவங்கி 5.30 மணி வரையிலான காலத்தை
பிரம்ம முகூர்த்த வேளை என்கிறோம்.

இந்த நேரம் அனைத்து விதமான சுபகாரியங்களும் செய்வதற்கு உகந்த காலமாக சொல்லப்படுகிறது.

பிரம்ம முகூர்த்த காலத்தில் வழிபாடு, படிப்பு, தியானம் என எதை செய்தாலும் அதற்கான முழு பலனும் நமக்கு அப்படியே கிடைக்கும் என்கின்றனர்.

இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஒவ்வொரு கிழமையிலும் ஒவ்வொரு தெய்வத்தை நினைத்து விளக்கேற்றி வழிபட்டால் பல விதமான நன்மைகள் கிடைக்கும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் எந்த கிழமையில்,என்ன விளக்கேற்றி யாரை வழிபட வேண்டும்? என்பதை பார்ப்போம்.

ஞாயிற்றுக்கிழமை - அகல் விளக்கேற்றி சத்ய நாராயண பூஜை செய்து பெருமாளை வழிபட்டால் பித்ரு தோஷம், முற்பிறவி கர்ம வினைகள், பாவங்கள், கிரக தோஷங்கள் விலகும்.

திங்கட்கிழமை - அகல் விளக்கேற்றி அம்பிகையை வழிபட்டால் பயம் நீங்கி, ஞானம் பெருகும்.

செவ்வாய்கிழமை - பஞ்சலோக விளக்கேற்றி, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து, முருகப் பெருமானை வழிபட்டால் நோய்கள் தீரும். கண் திருஷ்டி, பீடை, செய்வினை கோளாறுகள் நீங்கும்.

புதன்கிழமை - குத்துவிளக்கேற்றி, துளசி சாற்றி, விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து கிருஷ்ணரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கல்வி மேம்படும். சகல கலைகளும் சித்திக்கும்.

வியாழக்கிழமை - அகலில் நெய் விளக்கேற்றி சித்தர்கள், மகான்கள், குல தெய்வத்தை வழிபட்டால் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை - வெள்ளி விளக்கேற்றி கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும், கடன்கள் தீரும், அஷ்டலட்சுமிகளும் வீட்டில் நிரந்தர வாசம் செய்வார்கள்.

சனிக்கிழமை - நல்லெண்ணெய் விட்டு அகல் விளக்கேற்றி ஸ்ரீ ருத்திர மந்திர பாராயணம் செய்து சிவ பெருமானை வழிபட்டால் சனி தோஷம் விலகும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.