அனுமன் வாயு பகவானின் புத்திரன். அவரிடம் மிகுந்த சக்திகள் உள்ளன. அனுமன் சிரஞ்சீவி வரத்தைப் பெற்றவர்.அவர் மலையிலும் உயரமான உருவமும் எரும்பினும் சிறிய உருவமும் எடுக்க இயலும்.காற்றை விட வேகமாக பறக்க கூடிய சக்தி உடையவர். சிறிதும் நினைத்து பார்க்காத தூரத்தை எளிதில் கடக்க வல்லவர். இவர் வேகத்தை யாராலும் கணக்கிட முடியாது.
ராமாயணத்தில்:
ஒரு முறை சீதையைப் சந்திக்க கடலை மிக எளிதில் தாண்டி ஸ்ரீலங்காவை சென்றடைந்தவர் அனுமான்.
லட்சுமணனின் உயிரை காப்பாற்ற ஸ்ரீலங்காவில் இருந்து சஞ்சீவினி மலையை எடுத்துக்கொண்டு வந்தார்.
மகாபாரதத்தில்:
ஒருமுறை பீமனுக்கு வாக்குறுதி கொடுத்தது போல் அவரின் சகோதரரான அர்ஜுனனின் ரதத்தின் கொடியில் வீற்றிருந்தார். அர்ஜுனனுக்கு வந்த அத்தனை இன்னல்களையும் எதிரிகளையும் தவிடுபொடியாக்கினார்.
பாரதப் போர் முடிந்தவுடன் கிருஷ்ணன் அர்ஜுனனை தேரிலிருந்து கீழே இறங்கி வர கூறினார்.இருவரும் இறங்கிய உடனே ரதம் தீப்பற்றி எரிந்தது.இதைப்பற்றி அர்ஜூனன் கிருஷ்ணரிடம் வினவியபோது கிருஷ்ணன் நமக்கு வந்த எல்லா இன்னல்களும் இருந்து காப்பாற்றியது அனுமனே. அனுமன் நம் கொடியில் வீற்றிருந்து நம்மை இரட்சித்தார்.
அதனால் தான் நம் பிரயாணத்தின் போது அனுமனை பிரார்த்திக்கிறோம். அனுமன் நம் பிரயாணத்தை பாதுகாப்பாக அமைத்துக் கொடுப்பார்.