குருபகவான் அதிசார பலன்கள் 2025 - தனுசு

guru-bagavan-athisara-palangal-2025-thanusu
குருபகவான் அதிசார பலன்கள் 2025 - தனுசு

தனுசு ராசி நண்பர்களே கடந்த அக்டோபர் மாதம் 18-ம் தேதி குருபகவான் அதிசார கதியாக மிதுன ராசிக்குள் இருந்து கடகராசிக்குள் நுழைந்திருக்கிறார் வருகின்ற டிசம்பர் மாதம் 4-ம் தேதி வரை கடகத்தில் பயணிப்பார்.

இந்த குரு அதிசார பெயர்ச்சி உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை காண்போம்.

7-ம் ஸ்தானத்தில் அமர்ந்து நன்மைகளை வாரி வழங்கி வந்த குருபகவான் 8-ம் வீட்டுக்கு சென்று 
அஷ்டம பலன்களை வழங்குவார்

அஷ்டம் குரு பண விரையங்கள் உண்டு பண்ணுவார் ஆடம்ப செலவுகளால் பண இழப்புகள் உண்டாகும்.கணவன் மனைவிக்குள் புரிதல் இல்லாமல் போகும் குடும்ப உறவினர்களுக்குள் மன ஸ்தாபங்களும் சங்கடங்களும் உருவாகும் புதிய எதிரிகள் முளைப்பார்கள்..
குரு தான் நின்ற வீட்டைவிட பார்க்கும் இடங்களுக்கு நன்மைகளை வழங்குவார் 

குருவிற்க்கு 5,7 மற்றும் 9-ம் பார்வைகள் உண்டு 
அவ்வகையில் குருவின் 5-ம் பார்வையாக 12-ம் வீட்டை பார்ப்பதால் எவளவு விரையங்கள் ராசிக்கு உண்டானாலும் சிறிய செலவுகளாக குறைப்பார்.
குடும்பத்தில் சுப விரையங்கள் உண்டாகும் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும்.

7-ம் பார்வையாக 2-ம் வீட்டை பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் பணம் நகை ஆபரண சேர்க்கை உண்டாகும் வீடு மனை போன்ற சொத்துக்கள் சேரும்.

9-ம் பார்வையாக 4-ம் வீட்டை பார்ப்பதால் கடன் சுமைகள் குறையும் பூர்வீக சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும் தாய் வழி சொத்துகள் அதன் மூலமாக ஆதாயங்கள் பெறுவீர்கள்.

சொந்த வீடு கனவு நனவாகும்.
புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகமும் உண்டு.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய 
வியாழக்கிழமைகளில் நவகிரக குருபகவான் வழிபாடும் கால் நடைகளுக்கு தீவனம் வாங்கி தாருங்கள் இயலாதவர்களுக்கு உதவி செய்திடுங்கள் நல்லதே நடக்கும்.