குருபகவான் அதிசார பலன்கள் 2025 - துலாம்

guru-bagavan-athisara-palangal-2025-thulam
குருபகவான் அதிசார பலன்கள் 2025 - துலாம்

அக்டோபர் 18-ம் தேதி குருபகவான் அதிசார கதியாக மிதுனராசியில் இருந்து கடகராசிக்குள் நுழைகிறார் டிசம்பர் மாதம் வரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் இருந்து வழிநடத்துவார்.

இந்த குரு அதிசார பலன்களில் 9-ம் இடமான பாக்ய ஸ்தானத்தில் இருந்து இருந்து 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார் குரு பத்தில் அமர்வது பெரிய நன்மைகள் இல்லை தொழில் விரிவாக்கம் செய்யக்கூடாது புதிய முதலீடுகள் போட வேண்டாம் குறிப்பாக கடன் வாங்கி எதையும் செய்யாதீர்கள்.
குருபகவான் பார்வை பலம் சிறப்பு வாய்ந்தது ..அந்த வகையில் 5-ம் பார்வையாக 2-ம் ஸ்தானமான தன ஸ்தானத்தை பார்ப்பதால் பண வருவாய் நன்றாக இருக்கும்.

கொடுத்த கடன் தொகை வசூல் ஆகும் கடன் சுமைகள் குறையும்.
7-ம் பார்வையாக 4-ம் வீட்டை பார்ப்பதால் புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும்.

புதுவீடு கட்ட வாங்க லேன் எளிதில் கிடைக்கும் சொத்து பிரச்சனைகள் இருந்தால் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.தாயாருடனான உறவு பலப்படும் தாயின் அன்பை பெற முடியும் நண்பர்களுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

7-ம் பார்வையாக 6-ம் வீட்டை பார்ப்பதால் தொழில் போட்டிகள் குறையும் அலைச்சல் அதிகமாக இருந்தாலும் வருமானத்துக்கு குறை இருக்காது விளையாட்டு வீரர்களுக்கு பொற்காலம் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகள் பெறுவார்கள்.

வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்புகள் உருவாகும்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய செவ்வாய்கிழமைகளில் கால பைரவ வழிபாடும் தேய்பிறை அஷ்டமி திதியன்று பைரவருக்கு அர்ச்சனையும் செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.