குருபகவான் அதிசார பலன்கள் 2025 - கன்னி
அக்டோபர் மாதம் 18ம் தேதி குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்குள் அதிசார கதியாக பெயர்ச்சியாகி இருக்கிறார் டிசம்பர் மாதம் வரை கடகத்தில் இருந்த குரு பகவான் மீண்டும் மிதுனத்துக்கு செல்கிறார் அதுவரையிலும் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை காண்போம்.
இதுவரை பத்தாம் இடத்தில் அமர்ந்திருந்த குரு பகவான் லாப ஸ்தானமான 11ஆம் இடத்திற்கு வந்திருக்கிறார் இந்த அமைப்பு உங்கள் ராசிக்கு நல்ல யோக பலனி அளிக்கும் தன வரவுகள் நன்றாக இருக்கும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் உத்தியோகத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.
குரு பகவான் தான் நின்ற வீட்டிற்கும் பார்க்கும் இடங்களுக்கும் பலன்களை வாரி வழங்குவார் குருவிற்கு 5-ம் பார்வை 7-ம் பார்வை 9-ம் பார்வைகள் உள்ளன அதன்படி ராசிக்கு 5-ம் பார்வையாக 3-ம் வீட்டை பார்ப்பதால் தைரியம் துணிச்சல் எதையும் ரிஸ்க் எடுத்து செய்து முடிப்பீர்கள் தொழில் போட்டிகள் குறையும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.
உல்லாச பயணங்கள் மேற்கொள்ள முடியும்.
7-ம் பார்வையாக 5-ம் வீட்டை பார்ப்பதால் பிள்ளைகளால் ஆதாயம் பெறுவீர்கள் மகன் மகள்களுக்கு திருமண சுப காரியங்கள் நடக்கும் தடைபட்ட குழந்தை பாக்கியம் தடை இன்றி கிடைக்கும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும்.
புதிய வண்டி வாகனம் யோகமும் உண்டாகும்.
9-ம் பார்வையாக 7-ம் வீட்டை பார்ப்பதால் குடும்ப உறவுகளுக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும் நட்பு மலரும் பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவார்கள் அடிக்கடி விருந்துகளில் கலந்து கொள்வீர்கள் புதிய மனிதர்கள் சந்திப்பு நிகழும் அவர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.
பரிகாரம்!
வாரந்தோறும் வரக்கூடிய புதன்கிழமைகளில் லட்சுமி நரசிம்மர் அல்லது யோக நரசிம்மர் வழிபாடு செய்து வரவும் நல்லதே நடக்கும்.