குருபகவான் அதிசார பலன்கள் 2025 - கடகம்
அக்டோபர் 18-ம் தேதி முதல் குபகவான் அதிசாரகதியாக கடகராசிக்குள் நுழைகிறார்.டிசம்பர் மாதம் வரை கடகராசிக்குள் இருந்து பிறகு மிதுன ராசிக்குள் திரும்புவார்.
இதுவரை 12-ம் இடமான விரைய ஸ்தானத்தில் அமர்ந்த குரு ஜென்ம குருவாக உச்ச வீட்டுக்குள் நுழைந்து பலன்களை வழங்குவார்
குரு தான் நின்ற வீட்டைவிட பார்வை இடங்களுக்கு பலன் அதிகமாகும்.அந்த வகையில் இந்த அதிசார பலன்கள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை காண்போம்.
பொதுவாகவே ஜென்மத்தில் அமர்ந்த குரு பெரிய நற்பலன்கைளை வழங்க மாட்டார்
மனக்குழப்பங்களும் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றமும் எற்படுத்துவார் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் தடுமாற்றம் ஏற்படும் பண இழப்புகள் உண்டாகும்.
5-ம் பார்வையாக 5-ம் வீட்டை பார்ப்பதால் புத்திர ஸ்தானம் வலுபெறும் பிள்ளைகளால் ஆதாயம் பெறுவீர்கள் குடும்பத்தில் மகன் மகள்களுக்கு திருமணம் நடக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் கணவன் மனைவி ஒற்றைமை சிறப்பாக இருக்கும்.பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
7-ம் பார்வையாக 7-ம் வீட்டை பார்ப்பதால் குடும்ப உறவினர்களிடமிருந்த விரிசல்கள் மறையும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும் கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும் புதிய வேலை வாய்புகள் உருவாகும் தொழில் வியாபாாரத்தில் முன்னேற்றம் காணப்படும் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.
9-ம் பார்வையாக 9-ம் வீட்டை பார்ப்பதால் தந்தை மகன் உறவு பலப்படும் பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறுவீர்கள் வெளிநாடு வேலை வாய்புகள் உருவாகும்.
விவாகரத்து பெற்றவர்களுக்கு மறுமணம் நடக்கும்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய திங்கட்கிழமைகளில் நவகிர சந்திரன் வழிபாடும் சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடும் சிறப்பைத்தரும் நல்லதே நடக்கும்.