குருபகவான் அதிசார பலன்கள் 2025 - மேஷம்
மேஷராசி நண்பர்களே இந்த நவம்பர் மாதம் புதன் மற்றும் ராகுவை தவிர வேறு எந்த கோள்களும் நற்பலன்களை பெரிய அளவில் வழங்காது.
நவம்பர் 24ம் தேதிவரை 8-ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து நன்மைகளை வாரி வழங்குவார் பங்குசந்தை முதலீடுகள் திடீர் லாபத்தை தரும்.
மந்தநிலை மறையும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள்.
11-ம் இடமான லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும் வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்புகள் உருவாகும். வெளிநாடு வேலை வாய்புகள் கிடைக்கும்.
இம்மாதம் குருபகவான் அதிச்சாரகதியாக 3-ம் இடமான மிதுனத்தில் இருந்து 4-ம் இடமான கடகத்துக்கு செல்கிறார் குரு 4 ல் அமர்ந்தாலும் பெரிய நற்பலன்களை வழங்காது தாயாரின் உடல்நலத்தில் பிரச்சனைகள் வரக்கூடும் மருத்துவ விரைய செலவுகள் உண்டாகும்.
12-ம் இடமான விரைய சனி நடப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் செலுத்தவும் யாருக்கும் ஜாமீன் கையெப்பம் இடாதீர்கள்.
5-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் மகன் மகள்களுடன் கருத்து மோதல்கள் உருவாகும் வீண் விவாதங்களால் மன கசப்புகள் தோன்றும்.
இம்மாதம் சூரியன் 7 மற்றும் 8-ம் இடங்களில் பலவீனமாக காணப்படுவதால் அரசாங்க பகைகள் வரக்கூடும் அரசியல் செல்வாக்கு குறையும் புதிய முயற்ச்சிகளில் பின்னிடர்வுகள் உண்டாகும்.
8-ம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் முன் கோபம் அவசர முடிவுகள் பயம் பதட்டம் உண்டாகும்.சகோதர சகோதரர்களுக்குள் பிணக்குகள் தோன்றி மறையும் யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள்.
இம்மாதம் 25-ம் தேதிவரை சுக்கிரன் 7-ம் வீட்டில் பலவீன படுகிறார்
இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் வரக்கூடும் புரிதல் இல்லாமல் போகும்.
ஈகோ பார்ப்பார்கள். உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் பண விவகாரங்களில் கவனம் செலுத்தவும்.
நவம்பர் 20,21,22 சந்திராஷ்டமம்
பரிகாரம்!
வாரம் தோறும் சனிக்கிழமைகளில் நவகிரக வழிபாடு செய்து வாருங்கள் இயலாதவர்களுக்கு உணவு வழங்கள் நல்லது நடக்கும்.