அக்டோபர் மாதம் 2025 - மீனம் ராசி பலன்கள்
வருட கோள்களில் கேது 6-ம் இடத்தில் இருப்பதால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
4,ம் வீட்டில் குரு பகவான் சஞ்சரிப்பதால் பணம் தேவைகள் அதிகமாக காணப்படும் செலவுகள் அதிகரிக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை தொழில்களுக்காக புதிய முதலீடுகள் எதையும் போடாதீர்கள் வரக்கூடிய வருமானம் வந்து கொண்டே இருக்கும்.
சுக்கிரன் 6-மற்றும் 7-ம் இடங்களில் பலவீனப்படுவதால் கணவன் மனைவிக்குள் சண்டைகள் குடும்ப உறவினர்களிடம் மன ஸ்தாபங்கள் ஏற்படும் பண விவகாரங்களில் கவனம் தேவை.
இம்மாதம் செவ்வாய் 8, மற்றும் 9,ம் இடங்களில் பலவீனமாக காணப்படுவதால் முன்கோபம் அதிக அளவில் காணப்படும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள் தொழில் போட்டிகள் இருக்கும்.
ஜென்மச்சனி நடப்பதால் அவசர முடிவுகள் எதுவும் எடுக்காதீர்கள்.
யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போட வேண்டாம்.
சூரியன் 7 மற்றும் 8,ம் இடங்களில் சஞ்சரிப்பதால் அரசாங்க பகைகள் வரக்கூடும் ஞாபக மறதி அதிக அளவில் காணப்படும்.இம்மாதம் புதனும் 8-மற்றும் 9-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் பங்குச்சந்தை டிரேடிங் ஆன்லைன் வியாபாரங்கள் லாபத்தை தரும் புதன் அஷ்டம ஸ்தானத்தில் திடீர் அதிர்ஷ்டங்களையும் தரும்.
ராசிக்கு 12,ம் இடத்தில் ராகு இருப்பதால் மூன்றாம் நபர்களால் குடும்பத்தில் கலகம் ஏற்படும்.வீண் விரையங்கள் உண்டாகும்.
அன்னிய மொழிக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
அக்டோபர் 21,22,23,தேதிகளில் சந்திராஷ்டமம்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில்
நவகிரக சூரிய வழிபாடும்.
இம்மாதத்தில் வரக்கூடிய அமாவாசை அல்லது பௌர்ணமி திதியன்று குலதெய்வ கோயிலுக்கு சென்று வரவும் நல்லதே நடக்கும்.