அக்டோபர் மாதம் 2025 - கும்பம் ராசி பலன்கள்
வருட கோள்களில் குரு 5-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் உண்டாகும் திருமண சுபயோக நிகழ்ச்சிகள் நடக்கும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
அக்டோபர் 9-ம் தேதிவரை சுக்கிரன் 7-ம் இடத்தில் பலவீனமாக காணப்படுவார் பிறகு 8-ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் பலப்படுகிறார் அடிக்கடி விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள் எதிர்பாராத இடத்தில் இருந்து திடீர் பண வரவுகள் உண்டாகும்.
ஏழரை சனியில் இரண்டாம் இடத்து சனி நடப்பதால் பண விவகாரங்களில் தலையிட வேண்டாம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை.
ராசிக்குள் ராகுவும் 7-ல் கேதுவும் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் வரக்கூடும் கவனம்.
செவ்வாய் இம்மாதம் 27-ம் தேதிவரை 9-ம் இடத்தில் பலவீனமாக காணப்படுவார் முன்கோபம் அவசர முடிவுகளால் தேவையில்லாத மன ஸ்தாபங்களும் சங்கடங்களும் வரக்கூடும் யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். சூரியன் 8,9 ம் இடங்களில் பலவீனமாக காணப்படுவார்கள்.
ஞாபக மறதி அதிகமாக காணப்படும். அரசாங்க பகைகள் வரக்கூடும். யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள்.
பண சேமிப்புகள் முதலீடுகளில் கவனம் தேவை.
இம்மாதம் 24 ம் தேதிவரை புதனும் 9-ம் வீட்டில் பலவீனப்படுகிறார் சோம்பல் சுறுசுறுபின்மை மந்தநிலை காணப்படும்.
அக்டோபர் 19,20,21.தேதிகளில் சந்திராஷ்டமம்.
பரிகாரம்!
இந்த மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகளில் நவகிரக பூஜையும் வழிபாடும் செய்து வாருங்கள் அரசமரத்தடி வினாயகருக்கு தண்ணீர் ஊற்றி எருக்கம் மாலை அணிவித்து வரவும் நல்லதே நடக்கும்.