அக்டோபர் மாதம் 2025 - மகரம் ராசி பலன்கள்

october-2025-magaram-rasi-palangal
அக்டோபர் மாதம் 2025 - மகரம் ராசி பலன்கள்

ராசிக்கு  8,மற்றும் 9-ம் ஸ்தானங்களில்  வலம் வருவதால் குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும் திருமணங்கள் குழந்தை பாக்கியம் எளிதில் கிடைக்கும் தன வரவுகள் நன்றாக இருக்கும்.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.

ராசிக்கு 3ம் இடத்தில் சனிபகவான் இருப்பதால் தேக ஆரோக்கியம் பலம் பெறும் மருத்துவ விரைய செலவுகள் குறையும் வெளிநாடு வேலைக்கு முயற்ச்சி செய்பவர்களுக்கு புதிய வேலை வாய்புகள் உருவாகும்.

இம்மாதம்  செவ்வாய் 10-11.இடங்களில் பலத்துடன் சஞ்சரிப்பதால் காரிய தடைகள் அகலும் நினைத்த காரியம் யாவும் வெற்றியை தேடித்தரும் .தொழில் போட்டிகள் குறையும் . போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

இம்மாதம் புதன் 10,11.ம் இடங்களில் பலத்துடன் காணப்படுவதால். நன்மைகளை வழங்குவார் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் புத்தி சாதுர்சியத்தால் எதையும் சாதிப்பீர்கள் மன அமைதி கிடைக்கும் எதிர்பாராத பண வரவுகளால் தடைபட்ட காரியங்கள் நடக்கும் .

சூரியன்  மாத பிற்பாதி 10ம் இடத்திற்க்கு வருவதால் அரசாங்க அனுகூலங்கள் அரசியல் செல்வாக்கு கூடும்.

புது பொலிவும் தேஜஸ்சும் கூடும். தந்தை மகன் உறவு பலப்படும். வழக்குகள் வாபஸ் ஆகும்.

2-ம் இடத்தில் ராகு இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் செலுத்தவும். வீடு மனை நிலங்கள் வாங்கும் பொழுது பத்திர பதிவுகளில் கவனம் செலுத்துங்கள்.

6-ம் இடத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளால் பண விரையங்கள் உண்டாகும்.யாருக்கும் ஜாமின் கையெழுத்துக்கள் போடவேண்டாம்.
8-ம் இடத்தில் கேது இருப்பதால் தேவையில்லாத மனக்குழப்பங்கள் காணப்படும்.பிறரால் துன்பங்களும் சங்கடங்களும் உண்டாகும்.

அக்டோபர் 16,17,18,சந்திராஷ்டமம்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் ஆஞ்சனேய சுவாமிக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு செய்து வரவும் நல்லதே நடக்கும்.