அக்டோபர் மாதம் 2025 - விருச்சிகம் ராசி பலன்கள்

october-2025-viruchigam-rasi-palangal
அக்டோபர் மாதம் 2025 - விருச்சிகம் ராசி பலன்கள்

சுக்கிரன்  10 இடத்தில் பலமிழந்து காணபட்டாலும்  9-ம் தேதிக்கு பிறகு  11-ம் இடத்திற்க்கு  வருவதால் தொழில் வருமானம் நன்றாக இருக்கும் கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும் பிரிந்த உறவினர்கள் ஒன்று சேர்வார்கள் மன அமைதியும் சந்தோஷம் கிடைக்கும் எதிர்பாராத பண வரவுகளால் பணத் தேவைகள் பூர்த்தியாகும்.

இம்மாதம் 17ஆம் தேதி வரை சூரியன் லாப ஸ்தானமான 11 ஆம் இடத்தில் அமர்ந்து யோக நிலைகளை வாரி வழங்குவார் அரசாங்கத்தால் அனுபவங்கள் கிடைக்கும் போட்டி தேர்வில் வெற்றி பெறுவீர்கள் வழக்குகள் வாபஸ் ஆகும் அரசியல் செல்வாக்கு கூடும் பெயரும் புகழும் கிடைக்கும் தந்தை மகன் உறவு பலப்படும்.

10-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்  மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் கோயில் தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

இம்மாதம்  புதன் 12,மற்றும் 1,ம் இடத்தில் பலவீனம் ஆகிறார் இதனால் ஞாபக மறதி அதிகமாக காணப்படும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன்கள் போடாதீர்கள் பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்க்கவும்.

அஷ்ட ஸ்தானத்தில் குருபகவான் இருப்பதால் வீண் ஆடம்பர செலவுகள் குறைக்கவும்.

இம்மாதம் செவ்வாயும் 12 மற்றும் ஒன்றாம் இடங்களில் பலவீனமாக தென்படுவதால் முன் கோபம் அதிக அளவில் காணப்படும் அவசர முடிவுகளால் பிரச்சனைகள் சந்திக்க வேண்டி வரும் பொறுமையும் நிதானமும் மிக அவசியம்.

4-ம் ஸ்தானத்தில் ராகுபகவான் சஞ்சரிப்பதால் தாயாரின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள் தாயாரிடம் வாக்குவாதங்கள் செய்யாதீர்கள் வீடு மனை நிலங்கள் வாங்கும் பொழுது வில்லங்கம் இருக்கிறதா என்பதை கவனிக்கவும்.

5,ம் ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள் பிள்ளைகளால் நஷ்டங்கள் உண்டாகும் மனஸ்தாபங்களும் உருவாகும் வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாக காணப்படும்.

உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

அக்டோபர்  12,13,14 சந்திராஷ்டமம்

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய செவ்வாய்கிழமைகளில்  துர்கை அம்மன் வழிபாடும் எலுமிச்சை தீபமேற்றி அர்ச்சனையும் செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.