அக்டோபர் மாதம் 2025 - சிம்மம் ராசி பலன்கள்

october-2025-simmam-rasi-palangal
அக்டோபர் மாதம் 2025 - சிம்மம் ராசி பலன்கள்

சுக்கிரன் ராசிக்குள்ளும் மற்றும் 2,ம் இடங்களில் பலமாக சஞ்சரிப்பதால் கணவன் மனைவி உறவு பலப்படும் சுகவாழ்வு மேம்படும் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் லாபகரமாக அமையும் தீரா கடன்கள் விரைவில் அடைப்படும் கொடுத்து வாக்குறுதியை காப்பாற்ற முடியும் உறவினர்களால் நன்மைகள் உண்டாகும் ..
இம்மாதம் 17ஆம் தேதி வரை சூரியன் இரண்டாம் வீட்டில் பலவீனமாக தென்பட்டாலும் 17ஆம் தேதிக்கு பிறகு மூன்றாம் இடமான உபஜெய ஸ்தானத்தில் அமர்ந்து நன்மைகளை வழங்குவார் இதனால் அரசாங்க ஆதாயங்கள் கிடைக்கும் அரசாங்க அனுகூலங்கள் அரசியல் செல்வாக்கு கூடும் தந்தை மகன் உறவு பலப்படும்.
செவ்வாய் 27-ம் தேதிவரை 3-ம் இடத்தில் பலப்படுவதால் துணிச்சலாக எதையும் செய்து முடிப்பீர்கள் தொழில் போட்டிகள் குறையும்.

இம்மாதம் 24ம் தேதிவரை புதன் , மற்றும் 3,ம் இடங்களில் பலவீனமாக காணப்படுவதால் ஞாபக மறதி அதிகமாக காணப்படும் பண இழப்புகள் உண்டாகும் ஏமாற்றுகாரர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை.3ம் தேதிக்கு பிறகு புதன் பலம் பெறுவார்.
வருட கோள்களில் குருபகவான் 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் அமர்ந்து நன்மைகளை வழங்குவார் திருமண சுபகாரியங்கள் குடும்பத்தில் நடக்கும் தொழில் வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

7-ம் இடத்தில் ராகுபகவான் கண்டகச்சனியாக வலம் வருவதால் கணவன் மனைவிக்குள் தேவையில்லாத சண்டை சச்சரவுகள் உண்டாகும் ஈகோ பார்ப்பார்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வது சால சிறந்தது.
ராசிக்குள் கேது அமர்ந்திருப்பதால் மருத்துவ விரைய செலவுகள் உண்டாகும் தேக ஆரோக்கியம் கெடும் தேவையில்லாத குழப்பங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள் பண விரையங்கள் உண்டாகும் அந்நிய மொழிக்காரர்களிடம் எச்சரிக்கையாக.
அஷ்டமச்சனி நடப்பதால் பண விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை யாருக்கும் ஜாமின் கையொப்பங்கள் இடாதாதீர்கள்.
அக்டோபர் 6,7,8- தேதிகளில் சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய வியாழக்கிழமைகளில் நவகிரக குருபகவான் வழிபாடும். கால்நடைகளுக்கு தீவனமும் வாங்கி தாருங்கள் நல்லதே நடக்கும்.