அக்டோபர் மாதம் 2025 - மிதுனம் ராசி பலன்கள்
சுக்கிரன் ராசிக்கு 3- மற்றும் 4-ம் வீட்டிலும் இருந்து நற்பலன்களை வழங்குவார் பெண்களால் நன்மைகளும் கணவன் மனைவி உறவும் பலப்படும்.பண தேவைகள் பூர்த்தியாகும்.புதிய வாகன யோகம் அமையும்.உறவினர்களால் நன்மைகள் உண்டாகும்.
ராசிக்கு 10ம் இடத்தில் சனிபகவான் இருப்பதால் மருத்துவ விரைய செலவுகள் குறையும் உடல் ஆரோக்கியம் பெறும் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெறும்
புதிய தொழில்கள் மூலமாக நல்ல லாபத்தை காணலாம்.
அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். 3-ம் இடத்தில் கேது இருப்பதால் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் கோவில் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
அக்டோபர் 24-ம் தேதிவரை புதன் 5-ம் இடத்தில் பலவீனபடுகிறார் இதனால் ஞாபக மறதி அதிகமாக காணப்படும்
பண விவகாரங்களில் கவனம் தேவை அன்னிய நபர்களிடம் எச்சரிக்கையாக பழகவும்.
பங்குசந்தை முதலீடுகளில் நஷ்டம் அடைய நேரிடும் கவனம். இம்மாதம் செவ்வாய் 5-ம் இடத்தில் பலவீனமாக காண்படுவதால் முன் கோபத்தால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள் குறிப்பாக சகோதரி -சகோதரரர்களிடம் அனுசரணையுடன் விட்டுகொடுத்து போவது நல்லது.
சூரியனும் இம்மாதம் 4,5ம் இடங்களில் பலவீனமாக இருப்பார்.
இதனால் அரசாங்க பகைகள். உருவாகும் தேவையில்லாத விவகாரங்களில் தலையிடதீர்கள். தந்தை மகனுக்குள் வாக்குவாதங்கள் முற்றும்
வீண் விவாதங்களை தவிற்பது நலம்.
9-ம் வீட்டில் ராகு இருப்பதால் சொத்து பிரச்சனைகள் உண்டாகும் பூர்வீக சொத்துக்கள் விற்பனை செய்ய வேண்டாம் எதிர்பார்த்த விலைக்கு போகாது பங்காளிகளுக்குள் பகை உருவாகும் ..
ராசிக்குள் குருபகவான் இருப்பதால் சுப விரையங்கள் செய்வது நல்லது வீண் ஆடம்பர செலவுகளை தவிற்க்கவும்.
அக்டோபர் 2,3 மற்றும் 29,30,31,ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் உள்ளது.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய
புதன்கிழமைகளில் நவகிரக புதன் வழிபாடும் லட்சுமி நரசிம்மர் + யோக நரசிம்மர் தரிசனமும் சிறப்பைத்தரும்.