இன்றைய ராசி பலன்கள் - (18--09-2024 புதன் கிழமை)

today-rasi-palangal
இன்றைய ராசி பலன்கள் - (18--09-2024 புதன் கிழமை)

மேஷம்

உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் செயல்பாடுகள் சந்தோஷத்தை கொடுக்கும். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். பெரியோர்களின் ஆசி கிட்டும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு.

ரிஷபம்

குடும்பத்தில் தவிர்க்க முடியாத செலவுகள் வரும். உறவினர்கள் இல்லம் நாடி வருவர். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

மிதுனம்

எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். ஆரோக்ய விஷயத்தில் கவனம் தேவை. திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கடகம்

தியானம் மன அமைதியை தரும். பயணங்கள் சற்று தள்ளிப்போகும். விலகி நின்றவர்கள் கூட வலிய வந்துப் பேசுவர். உத்யோகத்தில் மாற்றம் ஏற்படும்.

சிம்மம்

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும். அருகாமையில் இருப்பவர்கள் பக்கபலமாக இருப்பர். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஆதரவு பெருகும்.

கன்னி

குடும்பத்தில் உயர்வு நிலை உண்டாகும். புத்தி சாதூர்யத்தால் தடைகளை தகர்த்தெறிய முடியும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். பண தேவைகள் பூர்த்தியாகும்.தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

துலாம்

சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தேக்க நிலையில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும். மனக்கவலைகள் நீங்கும்.நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை புரிந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.

விருச்சிகம்

குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். அடிக்கடி மறதி தொல்லை ஏற்படும்.பண விவகாரங்களில் கவனம் தேவை. திட்டமிட்ட காரியம் தாமதம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்

தனுசு

மன அமைதி கிடைக்கும். நல்லவர்களின் தொடர்பு நன்மையை தரும். பொருளாதார நிலையில் சில பின்னடைவுகள் வரும். எதிர்ப்புகளைச் சமாளிக்க முடியும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.

மகரம்

குடும்பத்தில் சகஜநிலை திரும்பும். எதிர்பார்த்தது தாமதமின்றி நடக்கும்.எதிர்பாராத்த இடத்தில் இருந்து பணம் கைக்கு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கும்பம்

குடும்பத்தில் முக்கிய வேலைகள் முடிவடையும். மனதில் புதிய எண்ணங்கள் பிறக்கும். கணவன் மனைவி உறவு பலப்படும்
யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்

மீனம்

அடுத்தவர் மனம் வருந்தும்படி பேச வேண்டாம். புது விஷயங்களில் ஆர்வக் கூடும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் நெருக்கடிகள் குறையும். மனக்குழப்பம் காணப்படும் யாருக்கும் வா்குறுதிகளை வழங்க வேண்டாம்.