இன்றைய ராசி பலன்கள் - (10-09-2025 புதன் கிழமை)
மேஷம்
ஆன்மீகத்தில் நாட்டம் கூடும். நண்பர்கள் ஆதரவு வழக்கம் போல் தொடரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
ரிஷபம்
குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். சென்ற இடத்தில் எல்லாம் மதிப்பு கூடும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் இருக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
மிதுனம்
குடும்ப கௌரவம் உயரும். மறைமுக எதிர்ப்புகள் தானாக நீங்கும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
கடகம்
பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் உண்டு. முக்கிய நபர்களின் சந்திப்பால் மன மகிழ்ச்சி ஏற்படும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
சிம்மம்
குடும்பத்தில் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். எதிர்காலம் பற்றிய கவலை உண்டாகும். சுற்றி இருப்பவர்களை அனுசரித்துப் போவது நல்லது. உத்யோக மாற்றம் ஏற்படும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.
கன்னி
சொந்த பந்தங்களால் நன்மை உண்டு. யாரிடத்திலும் உணர்ச்சிவசப்பட்டு பேச வேண்டாம். உடல் நலம் சீராகும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.
துலாம்
பிரியமானவர்கள் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனக்கவலைகள் நீங்கும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
விருச்சிகம்
குடும்ப ரகசியங்களை பாதுகாக்கவும். உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு இருக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
தனுசு
புதுமையான அணுகுமுறையால் பிரச்சனைக்கு தீர்வு வரும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
மகரம்
முன் கோபத்தை குறைப்பதால் நன்மை உண்டாகும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். திட்டமிட்ட காரியம் அனுகூலமாக முடியும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
கும்பம்
மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். பழைய வாகனத்தை சீரமைக்க வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மீனம்
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய பாதையில் பயணிக்க விருப்பம் ஏற்படும். கடன் சுமை குறையும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.