செப்டம்பர் மாதம் 2025 - மீனம் ராசி பலன்கள்

september-2025-meenam-rasi-palangal
செப்டம்பர் மாதம் 2025 - மீனம் ராசி பலன்கள்

மாத முற்பாதிவரை சூரியன் புதனுடன் இணைந்து சூரியனின் தனது சொந்த வீட்டில் பலம் பெற்றிருப்பதால் நன்மைகள் பல காணலாம் திடீர் தன வரவுகள் உண்டாகும் பண தேவைகள் பூர்த்தியாகும் கடன் இருந்தால் பெரிய தொகை ஒன்று கைமாறும். பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளியாக அமையும்.

பெரிய மனிதர்களின் ஆதரவும் உதவிகளும் கிடைக்கும்.

செப்டம்பர் 15-ம் தேதிவரை சுக்கிரன் பலமாக 5-ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும் கணவன் மனைவி உறவு பலப்படும்.
உறவினர்கள் நண்பர்களுக்குள் இருந்துவந்த விரிசல் மறையும் நட்பு மலரும்.

6-ம் இடத்தில் கேது இருப்பதால் நோய் நொடிகள் அகலும் எதிரிகள் தொல்லை குறையும்.
தொழில் முன்னேற்றம் காணப்படும்.

இம்மாதம் செவ்வாய் 7,மற்றும் 8-ம் இடங்களில் பலவீனமாக காணப்படுவதால் அவசர முடிவுகள் தவிற்க்கவும் எதையும் யோசித்து முடிவெடுக்கவும்.
ஜென்மச்சனி நடப்பதால் மனக்குழப்பங்கள் காணப்படும்.

யாரையும் முழுமையாக நம்பிவிடாதீர்கள். 12-ம் இடத்தில் ராகு இருப்பதால் வெளியூர் பயணங்கள் அதனால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும்.

4,ம் இடத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.
பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனத்தை செலுத்தவும்.

செப்டம்பர் 24,25,26 சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு 
செய்து வரவும் நல்லதே நடக்கும்.