செப்டம்பர் மாதம் 2025 - கும்பம் ராசி பலன்கள்
வழக்கம் போல் குருபகவான் ராசிக்கு 5-ம் இடத்தில் அமர்ந்து நன்மைகளை வாரி வழங்குவார்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நீடித்திருக்கும் திருமண சுப காரியங்கள் நடக்கும் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.
செப்டம்பர் 15-ம் தேதி புதன் 8-ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் யோக நிலைகளை வழங்குவார்.
திடீர் பண வரவுகளால் பண தேவைகள் பூர்த்தியாகும்.
பங்குசந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை தரும்.ஆன்லைன் வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு கிடைக்கும்.
இம்மாதம் சுக்கிரன் 7-மற்றும் 8-ம் இடங்களில் பலவீனமாக காணப்படுவதால் பெண்களால் விரையங்களும் அவர்களால் அவமானங்களும் உண்டாகும்
வண்டி வாகனங்கள் பழுது பார்க்க நேரிடும் உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
ராசிக்குள் ராகுவும் 7-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் மனக்குழப்பங்கள் காணப்படும்.
புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.யாருக்கும் ஜாமின் தராதீர்கள்.
இம்மாதம் சூரியன் 7-8-ம் இடங்களில் பலவீனப்படுவதால் அரசாங்க பகைகள் வரக்கூடும்
அரசியல் செல்வாக்கு சரியும்.
பெரிய மனிதர்களை பகைத்து கொள்ளாதீர்கள்.வீண் வம்பு வழக்குகள் வரக்கூடும் கவனம்.
செவ்வாய் 8,மற்றும் 9-ம் இடங்களில் பலவீனமாக காணப்படுவதால் முன் கோபத்தை தவிற்க்கவும் சகோதர சகோதரிகளிடம் அனுசரணையுடன் நடந்து கொள்ளுங்கள் விட்டு கொடுத்து போவது நன்று.
சனிபகவான் இரண்டாம் இடமான தன ஸ்தானத்தில் இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் செலுத்தவும்.
செப்டம்பர் 22,23,24 சந்திராஷ்டமம்
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் ஹனுமன் வழிபாடு செய்து வரவும் .
கால்நடைகளுக்கு உணவு வழங்குங்கள் நல்லதே நடக்கும்.