செப்டம்பர் மாதம் 2025 - தனுசு ராசி பலன்கள்

september-2025-thanusu-rasi-palangal
செப்டம்பர் மாதம் 2025 - தனுசு ராசி பலன்கள்

சுக்கிரன் 8,மற்றும் 9,ம் இடங்களில் பலமாக காணப்படுவதால் தொழில் வியாபாரங்கள் சிறப்படையும் பண தேவைகள் பூர்த்தியாகும் உறவினர்கள் உதவிகள் கிடைக்கும் புதிய வாகனம் வாங்கும் யோகம் உள்ளது.

இம்மாதம் செவ்வாய் 10,11ம் இடங்களில் பலப்படுவதால் காரிய தடைகள் விலகும் தைரியம் தன்னம்பிக்கை பிறக்கும்.

மூத்த சகோதரர்கள் வழியில் நன்மைகள் நடக்கும் தொழில் போட்டிகள் குறையும்.

ராகு 3,ம் இடத்தில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் மருத்துவ விரைய செலவுகள் குறையும்.

7-ம் ஸ்தானத்தில் குரு இருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.தடைபட்ட திருமணங்கள் தடையின்றி நடக்கும்.

மாத பிற்பாதிவரை சூரியன் புதன் பலவீனமாக காணப்படுவார்கள். பிறகு 10,ம் இடத்தில் பலம் பெற்று 
உச்ச புதனுடன் சூரியனும் இருப்பதால் பெயரும் புகழும் கிடைக்கும் புதிய பொலிவுடன் காணப்படுவீர்கள் புத்தி கூர்மையால் எதையும் சாதித்து காட்டுவீர்கள்.
9-ம் இடத்தில் கேது இருப்பதால் தந்தையுடன் கருத்து மோதல்கள் இருக்கும் வீண் விவாதங்களை தவிற்க்கவும்.

4-ம் இடத்த்தில் சனிபகவான் இருப்பதால் வீடு மனை சொத்துக்கள் வாங்கும் பொழுது கவனம் தேவை தாயாரின் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும்.

செப்டம்பர் 17,18,19 சந்திராஷ்டமம்

பரிகாரம்!
வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் வரலட்சுமி விரதம் இருந்து அம்பாள் வழிபாடு செய்து வரவும் நலலதே நடக்கும்.