செப்டம்பர் மாதம் 2025 - துலாம் ராசி பலன்கள்

september-2025-thulam-rasi-palangal
செப்டம்பர் மாதம் 2025 - துலாம் ராசி பலன்கள்

வருட கோள்களில் சனிபகவான் 6-ம் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் கடன் சுமைகள் குறையும்.
9-ம் இடத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் திருமண சுபகாரியங்கள் நடக்கும் குழந்தை பாக்கியம் தடையின்றி கிடைக்கும்.

கணவன் மனைவி உறவு பலப்படும். பண தேவைகள் பூர்த்தியாகும் நினைத்த காரியம் யாவும் நடக்கும்.
கேது 11-ம் இடத்தில் இருப்பதால் வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.

செப்டம்பர் 17-ம் தேதிவரை சூரியன்  11-ம் வீடான சிம்மத்தில் ஆட்சிபெற்று பலமாக காணப்படுவார் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும் அரசாங்க அனுகூலங்கள் ஆதயம் கிடைக்கும்.
புதனும் 15-ம் தேதிவரை சூரியனுடன் இணைந்து பயணிப்பதால் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை தரும்.
இரு கோள்களும் 15-17ம் தேதிகளுக்கு பிறகு 12-ம் இடத்தில் எதிர்மறையாக செயல்படும் கவனம்.

சுக்கிரன் 15-ம் தேதிவரை 10-ம் இடத்தில் பலவீனமாக சஞ்சரிப்பார் 
பெண்களால் அவப்பெயர் உண்டாகும் வண்டி வாகனங்கள் செலவு வைக்கும்.

செவ்வாய் 12-மற்றும் 1-ம் இடத்தில் பலவீனப்படுவதால் அவசர முடிவுகளும் முன்கோபத்தையும் தள்ளி வைக்கவும் யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள்.
ராகு 5-ம் இடத்தில் இருப்பதால் மருத்துவ செலவுகள் உண்டாகும்.

உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.
செப்டம்பர் 11,12 சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்து வரவும் இயலாதவர்களுக்கு உணவு வழங்குங்கள் நல்லதே நடக்கும்.