செப்டம்பர் மாதம் 2025 - கன்னி ராசி பலன்கள்

september-2025-kanni-rasi-palangal
செப்டம்பர் மாதம் 2025 - கன்னி ராசி பலன்கள்

சுக்கிரன் பலம்பெற்று 11,மற்றும் 12-ம் இடங்களில் பலம்பெற்று சஞ்சரிப்பதால் குடும்ப மகிழ்ச்சி சந்தோஷம் நீடித்திருக்கும் உறவு முறைக்குள் இருந்துவந்த மன ஸ்தாபங்கள் விலகும் புதிய வண்டி வாகன யோகம் உண்டு.

6-ம் ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் மருத்துவ செலவுகள் குறையும்.

புதிய வேலை வாய்புகள் உருவாகும்.

10-ம் இடத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் தொழில் வருமானம் சீராக இருக்கும் வரவுக்கேற்ப செலவுகளும் உண்டாகும் தேவையில்லாத பொருட்கள் 
வாங்கி குவிக்க வேண்டாம்.

7-ம் ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் பண விவகாரங்களில் கவனத்துடன் செயல்படவும் தேவையின்றி கடன்கள் வாங்க வேண்டாம்.
இம்மாதம் சூரியன் 12,மற்றும் ராசிக்குள் சஞ்சரிப்பதால் தேவையில்லாத சிக்கல்கள் உருவாகும் அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
புதனும் இம்மாதம் பலவீனப்படுவதால் ஞாபக மறதி அதிக அளவில் காணப்படும் சுறுசுறுப்பின்மை மந்தநிலை இருக்கும்.

செவ்வாய் 1,மற்றும் 2-ம் இடத்தில் இருப்பதால் முன்கோபம் அவசர முடிவுகளால் சங்கடஙமகள் தோன்றும்.

12-ம் இடமான விரைய ஸ்தானத்தில் கேது இருப்பதால் வீண் விரையங்கள் உண்டாகும் ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
செப்டம்பர் 11,12,சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் வாராஹி அம்மன் வழிபாடும் அர்ச்சனையும் செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.