செப்டம்பர் மாதம் 2025 - மிதுனம் ராசி பலன்கள்
சுக்கிரன் 2-மற்றும் 3,ம் இடங்களில் பலப்படுவதால் குடும்பத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும் பண வரவுகளால்
பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
10-ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் தொழில் வளம் பெருகும் வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள்.
11-ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் வெளிநாடு வேலை வாய்புகள் உருவாகும்.வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்புகள் உருவாகும்.
இம்மாதம் புதன் 3,மற்றும் 4-ம் இடத்தில் பலமாக காணப்படுவதால் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் மந்தநிலை நீங்கும் திடீர் பண வரவுகள் உண்டாகும்.
செப்டம்பர் 17-ம் தேதி வரை சூரியன் 3-ம் இடத்தில் பலப்படுவதால் அரசாங்க செல்வாக்கு பெருகும்.பெரிய மனிதர்களின் ஆதரவும் அவர்களால் உதவிகளும் கிட்டும்.
கேது 3-ம் வீட்டில் பலப்படுவதால் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் கோவில் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
இம்மாதம் செவ்வாய் 4 மற்றும் 5-ம் இடத்தில் பலவீனப்படுவதால் முன்கோபம் அதிக அளவில் காணப்படும் எதிர்மறை விமர்சனங்கள் வரக்கூடும்.
எதிரிகள் வளருவார்கள்.
ராசிக்கு குரு இருப்பதால் பண விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை.ஆடம்பர விரைய செலவுகளை குறைக்கவும்.
செப்டம்பர் 4,5,6. சந்திராஷாடமம்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய புதன் கிழமைகளில் யோக நரசிம்மர் வழிபாடு செய்து வரவும் நல்லதே நடக்கும்.