ஆகஸ்ட் மாதம் 2025 - மீனம் ராசி பலன்கள்
சுக்கிரன் 4, மற்றும் 5,ம் இடங்களில் பலமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நன்மைகள் நடக்கும் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் வேலையில் முன்னேற்றம் காணப்படும் வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் கணவன் மனைவி உறவு பலப்படும் உறவு முறைக்குள் இருந்து வந்த பூசல்கள் மறையும்.
6-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும் ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கம் கோயில் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவீர்கள் தொழில் போட்டிகள் குறையும் எதிரிகள் விலகுவார்கள்.
மாத முற்பாதிவரை சூரியன் 5-ம் வீட்டில் பலவீனமாக தென்பட்டாலும் பிறகு 6-ம் இடத்துக்கு சென்று நன்மைகளை வழங்குவார் செல்வாக்கும் அந்தஸ்தும் கூடும் நினைத்தது நடக்கும்.
4-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் வீண் விரைய செலவுகள் உண்டாகும் பண விவகாரங்கள் கவனத்துடன் இருக்கவும் பணம் கொடுக்கல் விவாகாரங்களில் மிகுந்த கவனம் தேவை.
ஏழரை சனியில் ஜென்ம சனி நடப்பதால் மிகுந்த எச்சரிக்கும் கவனமும் தேவை வண்டி வாகனங்களில் மெதுவாக செல்லவும் தேவையில்லாத இடையூறுகள் வரக்கூடும் யாருடைய பிரச்சினைகளுக்குள்ளும் தலையிடாதீர்கள்.
12-ம் இடமான விரைய ஸ்தானத்தில் ராகு இருப்பதால் சில விரையங்கள் உண்டாகும் உடமைகள் இழக்க நேரிடும் வேலை விஷயமாக வெளியூர் அல்லது வெளிநாடுகள் தங்கும் சூழல் வரும்.
இம்மாதம் புதன் 5-ம் இடத்தில் பலவீனப்படுவதால் ஞாபக மறதி அதிகமாக காணப்படும் சோம்பல் சுறுசுறுமை காரணமாக வேலைக்கு போகும் எண்ணங்கள் இருக்காது அதிக நாட்கள் ஓய்வு விடுப்பில் இருப்பீர்கள் இதனால் மேல் இடத்திலிருந்து புகார்கள் வரக்கூடும் கவனம்.
7-ம் இடத்தில் செவ்வாய்.இருப்பதால் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் ஆதிக்கம் செலுத்துவீர்கள் ஈகோ பார்ப்பீர்கள் முன் கோபம் அதிக அளவில் காணப்படும்.
ஆகஸ்ட் 28,29,30 சந்திராஷ்டமம்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய வியாழக்கிழமைகளில் நவகிரக குருபகவான் வழிபாடும் அர்ச்சனையும் செய்துவரவும். சித்தர் வழிபாடும் தியானமும் சிறப்பை தரும் நல்லதே நடக்கும்.