ஆகஸ்ட் மாதம் 2025 - சிம்மம் ராசி பலன்கள்
சுக்கிரன் 12-மற்றும் ராசிக்குளும் வலம் வருவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நீடிக்கும் கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும் தொழில் வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு உயரும்.
11-ம் வீட்டில் குருபகவான் சஞ்சரிப்பதால் திருமணதடைகள் விலகும் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். பொன் பொருள் ஆபரண சேர்க்கை உண்டகும்.
வீடு மனை சொத்துக்கள் வாங்கும் அமைப்பும் உள்ளது.
இம்மாதம் சூரியன் பலமிழந்து 12,மற்றும் 1-ம் இடங்களில் வலம் வருவதால் பெரிய மனிதர்களை பகைத்து கொள்ள வேண்டாம்.
தேவையில்லாத விவகாரங்களில் தலையிடாதீர்கள்.
2-ம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் முன்கோபம் அதிக அளவில் காணப்படும் தொழில் போட்டிகள் காணப்படும் விரோதங்கள் ஏற்படும்.
இம்மாதம் புதன் 12-ம் இடத்தில் இருப்பதால் சோம்பல் சுறுசுறுப்பின்மை காணப்படும்
மந்தநிலை காரணமாக கொடுக்கப்பட்ட வேலைகள் தடையை ஏற்படுத்தும்.
அஷ்டம ஸ்தானமான 8-ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை.சொத்து பிரச்சனைகள் தலைதூக்கும்.
ராசிக்குள் கேதுவும் 7-ம் இடத்தில் ராகுவும் சஞ்சரிப்பதால் மூன்றாம் நபர்களிடம் எச்சரிக்கையாக பழகவும் யாருக்கும் ஜாமின் தராதீர்கள்
உடல்நல குறைபாடுகள் வரக்கூடும் உணவு விஷயத்தில் எச்சரிக்கை தேவை.
ஆகஸ்ட் 12,13,14 சந்திராஷ்டமம்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் சிவன் ஆலயத்தில் உள்ள நவகிரக சூரியன் வழிபாடும்.
பௌர்ணமி திதியன்று திருவண்ணாமலை கிரிவலமும் சிறப்பைத்தரும் நல்லதே நடக்கும்.