ஆகஸ்ட் மாதம் 2025 - மிதுனம் ராசி பலன்கள்
சுக்கிரன் பலம் பெற்று 1மற்றும் 2-ம் ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள்.
கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும் மன ஸ்தாபங்கள் விலகும்.
வழக்கம் போல் கேது 3-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் உற்சாகமாக காணப்படுவீர்கள் நோய் நொடிகள் அகலும் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும்.
ஆன்மீக எண்ணங்கள் மேலாேங்கும் வேலை இழந்தவர்களுக்கு வேலை வாய்புகள் உருவாகும்.
10-ம் வீட்டில் சனிபகவான் சஞ்சரிப்பதால் புதிய தொழில்கள் மூலமாக லாபத்தை பெறுவீர்கள்.
கூட்டுத்தொழில் ஆதாயத்தை தரும் சொத்து பிரச்சனைகள் தீரும் வழக்குகள் இருந்தால் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும்.
ஆகஸ்ட் 17- ம் தேதிக்கு பிறகு 2ல் இருந்து சூரியன் 3-ம் இடத்துக்கு செல்வதால் நன்மைகள் நடக்கும் பெரிய மனிதர்களின் சந்துப்பு நிகழும் அவர்களின் ஆதரவும் உதவிகளும் கிடைக்கும் தந்தை மகன் உறவு பலப்படும்.
2-ம் வீட்டில் புதன் இருப்பதால் ஞாபக மறதி அதிகமாக காணப்படும் பண மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழக்கும் சூழலும் உருவாகும் புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
4-ம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் சகோதர சகோதரிக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றும் முன் கோபத்தை தவிற்ப்பது நன்று.
ராசிக்குள் குரு இருப்பதால் வீண் ஆடம்பர செலவுகள் குறைப்பது நன்று பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை யாருக்கும் முன் ஜாமீன் கையெழுத்துக்கள் போடாதீர்கள்.
9-ம் இடத்தில் ராகு இருப்பதால் மன உளச்சல் சங்கடங்கள் உண்டாகும் தேவையில்லாத மனக்குழப்பங்களுக்கு இடமளிக்காதீர்கள் உறவு முறைக்குள் அடிக்கடி சண்டைகள் வரக்கூடும் விட்டுக்கொடுத்து போவதால் நன்மைகள் நடக்கும்.
ஆகஸ்ட் 8,9,10 சந்திராஷ்டமம்
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய புதன்கிழமைகளில் லட்சுமி நரசிம்மர் வழிபாடும் அமாவாசை திதியன்று குலதெய்வ கோவிலுக்கும் செல்வதால் நன்மைகள் நடக்கும்.