ஆகஸ்ட் மாதம் 2025 - மேஷம் ராசி பலன்கள்

august-2025-mesham-rasi-palangal
ஆகஸ்ட் மாதம் 2025 - மேஷம் ராசி பலன்கள்

சுக்கிரன் 3-மற்றும் 4ம் இடங்களில் வலம் வருவதால் காரிய தடைகள் விலகும் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவி உறவு பலப்படும் உறவினர்களிடம் இருந்து நற்ச்செய்தி கிடைக்கும்.

புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டு.
இம்மாதம் புதனும் 4ம் இடத்தில் பலத்துடன் சஞ்சரிப்பதால் புத்தி கூர்மையால் எதையும் சாதித்து காட்டுவீர்கள் கூட்டுத்தொழில் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும் பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை தரும்.

6-ம் இடத்தில் செவ்வாயும் பலமாக காணப்படுதால் நினைத்த காரியம் யாவும் வெற்றியை தேடி தரும் போட்டி தேர்வுகள் வெற்றி பெறுவீர்கள் வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

11-ம் இடமான லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் வெளிநாடு வேலை வாய்புகள் உருவாகும்.

மருத்துவ விரைய செலவுகள் குறையும் அன்னிய மொழிகாரர்களின் உதவிகள் கிடைக்கும்.

இம்மாதம் சூரியன் 4 மற்றும் 5ம் இடத்தில் பலவீனமாக இருப்பதால் வீண் பழிச்சொல்கள் அவமானம் ஏற்படும் யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள்.

ஏழரைச்சனியாக 12ம் இடமான விரையச்சனி நடப்பதால் தண்ட செலவுகள் உண்டாகும் தேவையற்ற ஜாமீன் கையெழூத்துகள் வாக்குறுதிகளை வழங்க வேண்டாம் முன் கோபத்தை தவிற்பது நன்று.

3-ம் வீட்டில் குரு இருப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும் ஆடம்பர பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம். தேவையற்ற கடன் சுமைகளில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.

5-ம் இடத்தில் கேது இருப்பதால் பிள்ளைகளால் மன உளச்சல் உண்டாகும் சில சங்கடங்களும் விவாதங்ளும் நடக்கும் தேவையற்ற பேச்சுகளை தவிற்பது நன்று.
ஆகஸ்ட் 3,4,5  மற்றும் 31 ஆகிய 4 தினங்கள் சந்திராஷ்டமம்.

பரிகாரம்:
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகள் பெருமாள் வழிபாடு செய்து வாருங்கள்
பசுமாட்டுக்கு தீவனம் கொடுங்கள் இயலாதவர்களுக்கு உணவு கொடுங்கள் நல்லதே நடக்கும்.