என் அன்புக்குரிய திரைத்துறை உறுப்பினர்களே.. கமல்ஹாசன் அறிக்கை.
சனி பகவானின் தாமத நிகழ்வுகள்!
சனி கொடுத்தால் யார் தடுப்பார் என்ற ஜோதிட பழமொழி ஜோதிட சாஸ்திரத்தில் உள்ளது..!!
இந்த சனியின் காரகத்துவத்தில் மந்த தன்மை எனும் ஒரு காரகத்துவம் உள்ளது இதன் அடிப்படையில் இவர் எதை கொடுத்தாலும் காலதாமதமாகவே கொடுப்பார் அதே சமயம் இவர் கொடுப்பது எதுவாக இருந்தாலும் அது நிலையானதாகவும் பிரயோஜனமானதாகவும் இருக்கும்..!!
ஜனன ஜாதகத்தில் சனி பலம் பெற்று குருவின் பார்வையில் சனி இருந்தால் ஜாதகருக்கு ஜீவனத்திற்கு குறைவில்லை கர்மம் செய்ய குழந்தைகள் உண்டு சொத்துக்கள் உண்டு. குறிப்பாக சனி திசையில் ஜாதகர் வாங்கக்கூடிய சொத்துக்கள் பல தலைமுறைகளை தாண்டி நிற்கும்..!!
ஆக இந்த சனி பகவான் லக்னம் முதல் 12 பாவங்களில் நின்றால் எந்தெந்த விஷயங்களை ஜாதகருக்கு தாமதப்படுத்தி கொடுப்பார் என்பதை பார்க்கலாம்..!!
லக்கினத்தில் சனி
மிகவும் எளிமையாக இருக்க கூடியவர் விரக்தி வைராக்கியம் அதிகம் உண்டு ஜாதகரின் செயல்பாடுகள் ஜாமதமாக இருக்கும். லக்கினத்துடன் சனி சம்பந்தப்படும் பொது ஜாதகரின் வாழ்வில் ஒரு ஏற்றம் ஒரு இரக்கம் உண்டு ஆனால் இறுதியில் ஏற்றம் நிச்சயம் உண்டு..!!
2ல் சனி
வருமானத்தை தாமத படுத்தி நிலையான வருமானத்தை தருவார். ஆரம்ப கல்வி மற்றும் பேசுவதில் தடை தாமதம் தயக்கங்கள் உண்டு மனதிற்குள் இருப்பதை வெளிப்படையாக பேச தயங்குவர்..!!
3ல் சனி
ஜாதகரின் முயற்சிகள் தாமதம் ஆகும் திட்டமிட்ட செயல்களை நினைத்த நேரத்தில் நிறைவேற்ற முடியாமல் போராடுவார். Communication சார்ந்த விஷயங்களில் பல தடுமாற்றங்களை கடந்த பின் ஜாதகருக்கு விழிப்புணர்வு வரும்..!!
4ல் சனி
ஜாதகருக்கு சொந்த வீடு தாமதமாகவே அமையும் ஆரம்ப காலத்தில் வாடகை வீட்டில் வாழ்ந்து பாதி வாழ்க்கைக்கு மேல் சொந்த வீடு உருவாக்கி வாழ்வார்..!!
5ல் சனி
புத்திர பாக்கியத்தை தாமப்படுத்துவார் கருணை உணர்வு இருக்காது ஜாதகர் விரும்புகின்ற எண்ணங்களை நிறைவேற்ற கால தாமதம் ஆகும்..!!
6ல் சனி
சனி பகவானிற்கு ஏற்ற இடம் கடின உழைப்பு உண்டு எதிர்ப்புகள் குறைவு எதையும் வலிமையுடனும் தைரியத்துடனும் எதிர்கொள்வார் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க மாட்டார்..!!
7ல் சனி
திருமணம் அமையவும் திருமண நிச்சயம் செய்யவும் கால தாமதம் ஆகும் நிச்சயதார்த்தம் செய்வதற்கு குழப்பமும் தடை தாமதம் ஏற்படும் சிலர் நிச்சயதார்த்தம் செய்யாமல் நேரடியாக திருமணம் செய்து கொள்வார்கள் சிலருக்கு மாற்று மதம் ஜாதியின் திருமணம் நடக்கும்..!!
8ல் சனி
இது ஆயுள் ஸ்தானம் என்பதால் ஜாதகரின் ஆயுளை தாமதப்படுத்துவார் குழந்தைகளில் வளர்ச்சி தாமதமாகும் அல்லது முதல் குழந்தையின் திருமணம் தாமதமாகும்..!!
9ல் சனி
ஜாதகர் பிறந்த பின் தந்தையின் முன்னேற்றம் தாமதமாகும் உறவினர்களை வெறுப்பார்..!!
10ல் சனி
சிறு தடை தாமதங்களுக்கு பிறகு தொழில் அமையும் சொந்த திறமையால் முன்னேறி ஓய்வில்லாமல் உழைக்க கூடிய அமைப்பு உண்டு..!!
11ல் சனி
ஜாதகரின் நீண்ட நாள் ஆசைகள் தாமதமாகவே நிறைவேறும் பின் வாழ்க்கை என்பது இவர்களுக்கு சிறப்பு..!!
12ல் சனி
ஜாதகர் தாமதமாகவே தூங்க செல்வார் முதலிரவு குறித்த நேரத்தில் நடக்காமல் தள்ளிப்போகும்..!!
சனி பகவானுடன் இணைந்த கிரகங்களை பொறுத்து பலன்கள் மாறுபடலாம்..!!
பொதுவாகவே இருள்காரகன் சனி அமர்ந்த பாவகத்தில் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கும்..!!