என் அன்புக்குரிய திரைத்துறை உறுப்பினர்களே.. கமல்ஹாசன் அறிக்கை.
இன்றைய ராசி பலன்கள் (26-06-2025 வியாழக் கிழமை)
மேஷம்
அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வேண்டியவர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். பண விவகாரங்களில் கவனம் தேவை.கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை மாறும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
ரிஷபம்
குடும்ப செலவுகள் அதிகமாகும்.விரையங்களை தவிற்காகவும். நெருங்கிய சொந்தங்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். நிறைவேறாத ஆசைகள் கூட நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் கூடும்.
மிதுனம்
எதிரிகளின் தொல்லை வந்து போகும். யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம் மனதில் நல்ல எண்ணங்கள் உருவாகும். திருமணம் காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்,
கடகம்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். புது நட்பு மலரும்.வாகன பராமரிப்பு செலவு கூடும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
சிம்மம்
குடும்பத்தைப் பற்றிய சிந்தனை அதிகமாகும். வருங்கால திட்டம் நிறைவேறும்.யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். கடன் வாங்குவதை தவிற்க்கவும்.புது பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
கன்னி
உறவினர்களின் அன்பு மகிழ்ச்சி தரும். அவர்களால் உதவிகளும் கிடைக்கும் .அலைச்சல் அதிகமாக காணப்படும் எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் சிக்கனத்தை கடைபிடிக்கவும். பண விவகாரங்களில் கவனம் தேவை.பெரியோர்கள் ஆலோசோனை கைகொடுக்கும். வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரங்கள் மகிழ்ச்சியை தரும் .
விருச்சிகம்
பிரியமானவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளி உணவுகளை அறவே தவிர்க்கவும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.
தனுசு
குடும்ப வாழ்க்கையில் ஒற்றுமைகள் நிலவும். வரும் எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் மிதமான லாபத்தை தரும்.
மகரம்
கடிமான காரியங்களையும் எளிதில் முடிக்க முடியும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உடல் நலம் சீராகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் சீரான பாதையில் செல்லும்.
கும்பம்
குடும்ப சுமை அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சில தடங்கலுக்கு பின் கைகூடும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.
மீனம்
மனதிற்க்கு இதமான செய்தி ஒன்று கிடைக்கும். குடும்பத்தின் அடிப்படை வசதிகள் உயரும். தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்.